'தாய்க்கு ஈடு இணையில்லை..' ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல்!

By

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் விருது வென்ற பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம்.

வயது முதிர்வு காரணமாக, சில நாட்களாக உடல் நலமின்றி இருந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.

Recommended Video

சென்னை: ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமானார்.. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

திரையுலகினர்

திரையுலகினர்

இதையடுத்து திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில் ஏராளமான திரையுலகினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் குயின்

எங்கள் குயின்

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் குடும்பத்தினரும் ஏ.ஆர்.ரகுமானின் தாயாரும் இருக்கும் போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு எப்போதும், எங்கள் குயின் என்று கூறியுள்ளார். மறைந்த கரீமா பேகம், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாட்டி ஆவார்.

அம்மாவை படைத்தான்

அம்மாவை படைத்தான்


இசை அமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், தேவிஶ்ரீ பிரசாத் ஆகியோரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமன் வெளியிட்டுள்ள இரங்கலில், 'கடவுள் எல்லா இடங்களில் இருக்க முடியாது என்பதால் அம்மாவை படைத்தான். அன்புக்கு உரியவரை இழப்பதை விட இந்த உலகில் வேதனையானது எதுவும் இல்லை' என்று கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

இயக்குனர் சேரன் வெளியிட்ட இரங்கலில், அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். இயக்குனர்கள் கோப்ரா அஜய் ஞானமுத்து, மோகன் ராஜா, லிங்குசாமி, விக்னேஷ் சிவன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உங்களின் வலிமை

உங்களின் வலிமை


பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் வெளியிட்ட இரங்கலில், இந்த செய்தியை கேட்டதும் உடைந்து விட்டேன். உங்களின் வலிமை உங்கள் அம்மா என்பது எனக்குத் தெரியும். வலிமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஈடு இணையில்லை

ஈடு இணையில்லை

குஷ்பு வெளியிட்ட இரங்கலில், தாய்க்கு ஈடு இணையில்லை. அந்த வெற்றிடம் எப்போதும் நம்முள் இருக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்த வலியை தாங்கும் சக்தியை அல்லா தந்தருளட்டும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X