ஒரு முறை பின்வாங்கினாலும் 14 ஆண்டுகள் கழித்து 'அங்கு' செல்லும் கவுதமி
சென்னை: 14 ஆண்டுகள் கழித்து கவுதமி மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கவுதமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
உலக நாயகன் கமல் ஹாஸனுடன் 13 ஆண்டுகள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்த அவர் தற்போது கமலை பிரிந்துவிட்டார். இதையடுத்து கவுதமி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மலையாளம்
பி.டி. குஞ்சு முகமது இயக்கி வரும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடிக்கவிருந்தார் கவுதமி. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

இ
குக்கு சுரேந்திரன் இயக்கி வரும் மலையாள படம் இ. த்ரில்லர் படமான இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு கடந்த 27ம் தேதி துவங்கியது.

14 ஆண்டுகள்
கவுதமி முன்னதாக 2003ம் ஆண்டு வெளியான வரும் வருன்னு வன்னு மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து தற்போது மலையாள படத்தில் நடிக்கிறார்.

கவுதமி
இ படத்தில் கவுதமியின் கதாபாத்திரம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் பல ஆண்டுகள் கழித்து அவரை திரையில் பார்க்க சேட்டன் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











