ஆமாம், தேவதைக்காக காத்திருக்கிறோம்... ஜெனிலியா கர்ப்பத்தால் குஷியில் கணவர் ரிதேஷ்

மும்பை: நடிகை ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலை அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக் உறுதி செய்துள்ளார்.

தமிழில் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகை ஜெனிலியா, சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் ரிதேஷ் தேஸ்முக்கிற்கும் இடையே காதல் உண்டானது.

பத்து வருட காத்திருப்பிற்குப் பின், பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2012ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஜெனிலியா கர்ப்பமாக உள்ளதாக பத்திரிக்கைகளில் வெளியான தகவலை அவரது கணவர் தேஷ்முக் உறுதி செய்துள்ளார்.

கர்ப்பம்...

கர்ப்பம்...

சமீபத்தில் நடந்த பட விழாவிற்கு தனது கணவருடன் வந்திருந்தார் ஜெனிலியா. அப்போது அவரது மேடிட்ட வயிறைக் கண்ட பத்திரிக்கையாளர்கள் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டார்கள்.

மவுனம்...

மவுனம்...

ஆனால், ஜெனிலியா தரப்பு அத்தகவல் மறுக்கவுமில்லை, உறுதி செய்யவுமில்லை. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தனர்.

கர்ப்பம் உறுதி...

கர்ப்பம் உறுதி...

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரிதேஷ், ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

தேவதைக்காக காத்திருக்கிறோம்...

தேவதைக்காக காத்திருக்கிறோம்...

மேலும், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ரிதேஷ், ‘தங்கள் வீட்டிற்கு புதிதாக வரக்கூடிய தேவதையை இருவரும் பெரிதும் எதிர்நோக்கி காத்திருப்பதாக' தெரிவித்துள்ளார்.

வாழ்த்து...

வாழ்த்து...

ஜெனிலியா கர்ப்பமாக இருக்கும் செய்தியறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு மறுப்பு...

கடந்தாண்டு மறுப்பு...

கடந்த வருடமும் இதேபோல் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அடுத்த சில தினங்களில் ரிதேஷ், தனது மனையி ஜெனிலியா கர்ப்பமில்லை என்று மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X