ரஜினியின் ‘2.O'... இந்த ஆண்டாவது ரிலீசாகுமா?
Recommended Video

இதுவரை எந்த ரஜினி பட ரிலீசிலும் இல்லாத குழப்பம் 2.ஓ படத்துக்கு ஏற்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார் நடிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது '2.O'. படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் படத்தினை கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியிட முடிவு செய்தது படக்குழு.

கிராபிக்ஸ்
ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் சரிவர முடிவடையாததால் தீபாவளி தினத்தில் இருந்து ஜனவரி மாதத்திற்கு தள்ளிச் செல்வதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜனவரி மாதமும் வெளியிட முடியவில்லை.

மேலும் தள்ளிப் போகுது
படத்தினை ஆகஸ்ட் மாதத்திற்கு கொண்டு செல்வதாக படக்குழு தெரிவித்தது.
தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக்கிறது என்றும் அதை விட்டால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் சிக்கல்
ஆனால், சுதந்திர தினத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘கோல்டு' என்ற இந்தி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதே நாளில் அவர் நடித்துள்ள 2.0 படத்தையும் வெளியிடுவது சரியாக இருக்குமா? என்று படக்குழுவினர் யோசிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியிட உள்ளனர். பண்டிகை நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவதே சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள்.

மோத தயாராகும் படங்கள்
படத்தினை தீபாவளிக்கு தள்ளி வைத்தாலும் விஜய், அஜித்குமார் நடிக்கும் புதிய படங்கள் மற்றும் அமிதாப்பச்சன், அமிர்கான், கத்ரினா கைப் இணைந்து நடித்துள்ள டக்ஸ் ஆப் ஹின்டோஸ்டன் என்ற இந்தி படம் ஆகியவற்றுடன் மோத வேண்டி இருக்கும்.
ஆகவே படத்தினை வெளியிடுவதில் தொடர்ந்து பல குழப்பத்தில் உள்ளது படக்குழு.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆனால் படத்தை எப்போது வெளியிடப் போகிறோம் என இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா தரப்பு வெளியிடவில்லை. எனவே ஆகஸ்ட்டில் ரிலீஸ் இருக்கும் என நம்புகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











