தீபாவளிக்கு ஏழு சொன்னாங்க... மூணாவது வருமா?
தீபாவளிக்கு நான்கு படங்களாவது வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

துப்பாக்கி -கள்ளத் துப்பாக்கி - போடா போடி
இந்த தீபாவளிக்கு துப்பாக்கி, கும்கி, போடா போடி, கள்ளத்துப்பாக்கி உள்பட 7 படங்கள் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.

இன்னும் கத்திரியே போடவில்லையாம்
ஆனால் இப்போது இவற்றில் பாதிக்கு மேல் சென்சார் ஆகியும் கூட, வெளியாக முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

போட்டியிலிருந்து ஒதுங்கிய போடா போடி
போடா போடி படம் தீபாவளி ரேஸிலிருந்து ஒதுங்கிவிட்டதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.அடுத்து நீர்ப்பறவை. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியவில்லையாம்.

துப்பாக்கியிலும் சிக்கலாம்
தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் முக்கியமானதாகக் கருதப்பட்ட துப்பாக்கி கூட வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். நிதிச் சிக்கல்களால் கும்கிக்கும் சிக்கலாம்.

இப்போதைக்கு அம்மாவின் கைபேசி
இப்போதைக்கு அம்மாவின் கைபேசி, கள்ளத்துப்பாக்கி, மன்சூரலிகான் படம் என சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீசுக்கு நிற்கின்றன.

பெரிய படங்கள் சந்தேகம்தான்
தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், மற்ற பெரிய படங்கள் சிக்கல்களைத் தாண்டி வெளி வருமா என்பது சந்தேகம்தானாம்!


Click it and Unblock the Notifications











