நடக்குமா.. நடக்காதா...? பைரவா ஆடியோ ரிலீஸ் எப்போது?
விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் இசை வெளியீடு நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் உருவாகும் 'பைரவா' படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வரும் டிசம்பர் 17-ந் தேதி வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகின.

ஆரம்பத்திலிருந்தே பைரவா இசை வெளியீட்டை சாதாரணமாகவே நடத்தும்படி விஜய் கூறி வந்துள்ளார். எனவே நிகழ்ச்சி ஏதும் வைக்காமல் யுட்யூபில் வெளியிடுவதாகத்தான் திட்டம்.
ஆனால் இப்போது மீண்டும் இசை விழா நடப்பது குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.
எனவே இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்குமா? சாதாரணமாகவே பாடல்கள் வெளியாகுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications