twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறுபடியும் கிளம்பும் பூதம்... க்யூப் - தயாரிப்பாளர் சங்க பிரச்னையில் புது குழப்பம்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்ற சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்து இரண்டு வாரங்களாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் மீண்டும் இந்தப் பிரச்னையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனமான க்யூப், கட்டணத்தைக் குறைப்பதாக தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளவே, தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றது.

    Confusion in Qube producer council issue

    தயாரிப்பாளர் சங்கத்தினர், க்யூப் நிறுவனத்தின் பழைய கட்டணத்தைக் குறைக்கவேண்டும் எனத்தான் கோரிக்கை வைத்தனர். கட்டணக் குறைப்புக்கு ஒப்புக்கொண்ட க்யூப் நிறுவனம் சமீபத்தில் உயர்த்திய கட்டணத்திலிருந்து குறைத்துள்ளது.

    இந்தக் கட்டண விவகாரம் குழப்பம் ஏற்படுத்தியிருப்பதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

    க்யூப் நிறுவனத்தின் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரிடமும், பேச்சுவார்த்தை நடத்த உதவிய அமைச்சர்களிடமும் முறையிட முடிவெடுத்துள்ளனர்.

    English summary
    Qube has agreed to a reduce rate, has been reduced from recently raised rate. However, the producers demanded that the qube reduced to the old rate.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X