twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷின் சான்றிதழ்களில் ஏகப்பட்ட குழப்பம்... கவலையில் கஸ்தூரிராஜா குடும்பம்!

    By Shankar
    |

    தனுஷை தங்கள் மகன் என சொந்தம் கொண்டாடும் கதிரேசன் - மீனாட்சி தம்பதிகளுக்கு சற்றே சாதகமாக மாறத் தொடங்கியிருக்கிறது வழக்கு. காரணம் தனுஷ் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களில் காணப்படும் குழப்பம்.

    இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதிகளின் மகன் நடிகர் தனுஷ். இவருக்கு இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு.

    ஆனால் தனுஷை தங்கள் மகன் என சொந்தம் கொண்டாடுகிறார்கள் கதிரேசன் - மீனாட்சி.

    Confusions in Dhanush's certificates

    'சிறுவயதில் காணாமல்போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ்' என்று வாதாடும் இவர்கள், இப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவும் சம்மதம் என்கிறார்கள்.

    தங்கள் மகன் கலைச்செல்வனின் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழை, அந்தத் தம்பதியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தனுஷை இரு வாரங்களுக்கு முன்பு மதுரைக் கிளையில் ஆஜராக உத்தரவிட்டது நீதிமன்றம். கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமியுடன் நேரில் வந்தார் தனுஷ்.

    இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும் தனுஷ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், அவருடைய பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது.

    கதிரேசன் - மீனாட்சி அளித்த சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள், தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தார்கள்.

    "இது பொய் வழக்கு. கஸ்தூரிராஜாவின் மகன் வெங்கடேஷ் பிரபுதான் தனுஷ். அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளோம். மருத்துவப் பரிசோதனை அறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்போது உண்மை தெரியவரும்," என்றார் கஸ்தூரிராஜா தரப்பு வழக்கறிஞர்.

    ஆனால் கஸ்தூரிராஜாவின் பெயர் மாற்றத்திலும், சாதிச் சான்றிதழ்களிலும் பெரும் குழப்பம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    "கஸ்தூரிராஜாவும் சரி, தனுஷை சொந்தம் கொண்டாடும் கதிரேசனும் சரி... இருவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் தனுஷுக்கு எஸ்சி என்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இது உண்மை என நிரூபணமானால் பெரும் மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள்.

    அடுத்து கஸ்தூரிராஜாவின் பெயர் மாற்றம். இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. 2015-ல்தான் கெஸட்டில் கஸ்தூரி ராஜாவாக மாற்றியிருக்கிறார். ஆனால் 2003-ல் தனுஷ் எனப் பெயர் மாற்றம் செய்தபோது, தந்தை பெயர் கஸ்தூரி ராஜா எனப் போட்டிருக்கிறார். 2015-ல் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்ட பெயரை, 2003லேயே பயன்படுத்தியது எப்படி செல்லும்?" என்கிறது கதிரேசன் தரப்பு.

    இந்த சான்றிதழ் குழப்பம் தங்களுக்குச் சாதகமாக முடியும் என அவர்கள் பலமாக நம்புகிறார்கள். உண்மையில் இதையெல்லாம் அறிந்து சற்று பதட்டத்தில் உள்ளதாம் கஸ்தூரிராஜா தரப்பு.

    English summary
    Confusions in actor Dhanush's certificates which provide in Madurai Court in a case filed by Madurai couple, caused tension in Dhanush family
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X