Beast FDFS : திரைபிரபலங்கள் என்ன சொன்னாங்க தெரியுமா ?
சென்னை : உலகம் முழுவதும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. விஜய்க்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
Recommended Video

விஜய் படம் எப்போது வெளியானாலும், அவரது ரசிகர்கள் அதனை பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.
பீஸ்ட் படத்திற்கும் தளபதியின் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டாசு வெடித்து
பீஸ்ட் திரைப்படத்தின் FDFS திருவிழா பட்டாசு வெடித்து பட்டையைக் கிளப்புகிறது. விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பீஸ்ட் படத்தை திரையரங்குகளில் பார்த்தனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், பீஸ்ட் படம் வெளியாகி உள்ளதால் தியேட்டரில் ரசிகர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

வம்சி
பீஸ்ட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன், இயக்குநர் வம்சியும் வெற்றி திரையரங்கில் பார்த்தனர். தளபதி 66 திரைப்படத்தை இயக்க உள்ள வம்சி, நெல்சனை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இணையத்தில் இந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

அருண்விஜய் வாழ்த்து
நடிகர் விஜய் சார் மற்றும் பீஸ்ட் படக்குழுவினருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், பாக்ஸ் ஆபிஸில் பீஸ்ட் சாதனை படைக்கும் என நடிகர் அருண் விஜய் ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார்.

ஆர்யா வாழ்த்து
நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், பீஸ்ட் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையவும், விஜய் அண்ணா மற்றும் நெல்சன் பிரதருக்கு வாழ்த்து என என பதிவிட்டுள்ளார்.

அரபிக் குத்து
பீஸ்ட் படத்தின் முதல் பாதி 50 சதவீதம் காமெடி மற்றும் 50 சதவீதம் ஆக்ஷன் கலந்து இருக்கிறது. ஃபுல் பீஸ்ட் மோடில் தளபதி விஜய் நடித்துள்ளார். அவருடைய ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது . அரபிக் குத்து பாடலில் தளபதியின் வெறித்தனமான ஆட்டத்தை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பூஜா ஹெக்டே செம அழகாக தனது காட்சிகளில் கச்சிதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் என ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் ட்வீட்
நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற விஜய்க்கும் இயக்குநர் நெல்சனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நெல்சனின் முந்தைய திரைப்படமான டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இப்படம் வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே வெற்றி தியேட்டரில்
பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே,அபர்ணாதாஸ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் சென்னை வெற்றி திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்தனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், பலத் திரைப்பிரபலங்களும், பீஸ்ட் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரத்னகுமார் விமர்சனம்
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் ஒரு தீம் பார்க் என்றும், இதில், ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை விதமான ரைடுகளும் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். அனிருத் மற்றும் விஜய் ஒட்டுமொத்த படத்தையும் அல்ட்ரா மாஸ் பர்ஃபார்மன்ஸ் உடன் தாங்கிப் பிடித்துள்ளனர் என்றும் இயக்குநர் நெல்சன் ஆக்ஷனையும் ஹியூமரையும் அடுக்கி வைத்து ரசிகர்களை போரடிக்காமல் படத்தை கொண்டாட வைத்துள்ளார் என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











