twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘Why I killed Gandhi’ படத்தை வெளியிடக் கூடாது.. மகாராஷ்ட்ர முதலமைச்சருக்கு காங்கிரஸ் கோரிக்கை

    |

    மும்பை: 'மகாத்மா' என உலகம் முழுவதும் போற்றப்படும் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஹீரோவாக சித்தரித்து உருவாக்கப்பட்டு இருக்கும் 'Why I killed Gandhi' படத்தை தடை செய்ய வேண்டும் என மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

    வரும் 30ம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இப்படியொரு படத்தை ஒடிடியில் முடிவு செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா ஊழியர்கள் சங்கத்தினர் (AICWA) கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளனர்.

    Why I killed Gandhi

    Why I killed Gandhi

    கடந்த 2015ம் ஆண்டு Why I killed Gandhi எனும் புத்தகம் வெளியானது. அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தற்போது அதே டைட்டிலில் படத்தையும் உருவாக்கி உள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே அந்த புத்தகத்தையே தடை செய்துள்ள நிலையில், தற்போது தணிக்கை இல்லாததால் ஒடிடி தளத்தில் அந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    கோட்சேவின் வாக்குமூலம்

    கோட்சேவின் வாக்குமூலம்

    நாதுராம் கோட்சே காந்தியை ஏன் சுட்டுக் கொன்றேன் என்பதற்கு நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தேசத்தந்தையாக போற்றப்படும் காந்தியை கொன்றவரை ஹீரோவாக சித்தரிக்கும் விதத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் கிளம்பி உள்ளன.

    காங்கிரஸ் கோரிக்கை

    காங்கிரஸ் கோரிக்கை

    மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இந்த படத்தை ஒடிடியில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியானால் அது காந்திக்கு செய்யும் பெரிய துரோகம் என்றும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வரும் ஜனவரி 30ம் தேதி காந்தியின் நினைவு நாளிலேயே அந்த படம் வெளியாவதை ஒரு போதும் ஏற்க முடியாது எனக் கூறியுள்ளனர்.

    கோட்சேவாக நடித்தவரின் பதில்

    கோட்சேவாக நடித்தவரின் பதில்

    இந்த படத்தில் நாதுராம் கோட்சேவாக நடித்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகருமான அமோல் கோல்கே தான். தற்போது கிளம்பியிருக்கும் எதிர்ப்பு குரலுக்கு பதில் அளித்தவர் இந்த படத்தில் கோட்சேவாக நடிப்பதில் உள்ள சிரமத்தை ஒரு நடிகராக எதிர்கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்தேன் என்றும் கோட்சேவின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சமாளித்துள்ளார்.

    பிரதமருக்கு கோரிக்கை

    பிரதமருக்கு கோரிக்கை

    'மகாத்மா' என உலகம் முழுவதும் போற்றப்படும் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஹீரோவாக சித்தரித்து உருவாக்கப்பட்டு இருக்கும் 'Why I killed Gandhi' படத்தை தடை செய்ய வேண்டும் என மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. வரும் 30ம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

    English summary
    Congress urges Maharastra CM to ban ‘Why I killed Gandhi’ movie which will plan to release on Jan 30th 2022.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X