Conjuring Kannappan: கண்ணமூடினா அவ்ளோதான்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர்!

சென்னை: நடிகர் சந்தானத்தை போலவே நாமும் ஒரு காமெடி பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விடலாம் என்கிற நோக்கத்துடன் சதீஷ் நடித்துள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஆள விடுங்கடா சாமி நான் ஆன்லைன் பக்கமே வரவில்லை என ஒதுங்கிய லோகேஷ் கனகராஜை மீண்டும் இழுத்துக்கொண்டு வந்து இந்த டீசரை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட வைத்துள்ளது.

சிரிப்புக்கு ஃபுல் கேரண்டி என்பது போல டீசரைப் பார்த்தாலே பல இடங்களில் சிரிக்க வைக்கும் அளவுக்கு காஞ்சுரிங் கண்ணப்பன் கலாட்டா செய்கிறது.

Conjuring Kannappan Teaser released by Lokesh Kanagaraj

காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர் ரிலீஸ்: அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ஆனந்தராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் டீசரை லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.

கனவில் வரும் பேய்: லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான இன்செப்ஷன் படத்தில் கனவில் நடைபெறும் விஷயங்களை கிறிஸ்டோபர் நோலன் படமாக இயக்கி இருப்பார். அதில் பேய் கதையை கலந்தது போல நைட்மேர் படங்களும் உருவாகி உள்ளன. இந்நிலையில், அப்படியொரு படத்தில் காமெடியையும் கலந்து காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தை உருவாக்கி உள்ளனர்.

Conjuring Kannappan Teaser released by Lokesh Kanagaraj

ட்ரீம் கேட்சரில்: ஒரு இறகை பிய்த்து விட்டால் அவர்களுக்கும் அந்த கனவு வரும் என சதீஷை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன் என அனைவருமே அந்த கனவு பேய் விட்டில் சிக்கி சின்னா பின்னமாகப் போகின்றனரா? அல்லது இவர்களிடம் சிக்கி அந்த பேய்கள் சின்னா பின்னமாகப் போகிறதா? ரெஜினா கசாண்ட்ரா யார்? என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் உருவாகி உள்ள சதீஷின் காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர் ரசிக்கும்படியாக எடிட் செய்யப்பட்டு இருக்கிறது.

லவ் டுடே போல: ஏஜிஎஸ் தயாரிப்பில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற லவ் டுடே படத்தைப் போல காஞ்சுரிங் கண்ணப்பன் படமும் பேய் ஹிட் அடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. லவ் டுடே வெளியாகி ஒரு வருஷம் ஆன நிலையில், இந்த படத்தின் டீசரை ஏஜிஎஸ் வெளியிட்டுள்ளது. தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் தயாரித்து வரும் நிலையில், இந்த படத்துக்கு விஜய் ரசிகர்களின் சப்போர்ட் இருக்கும் என தெரிகிறது. இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X