Actor Bala: என் முதல் மனைவி சாதாரணமானவ இல்ல.. ஏதோ பெரிய சதி நடக்குது.. நடிகர் பாலா புகார்!

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரனான நடிகர் பாலா முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பாலா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மிகப்பெரிய மோசடி வலையில் என்னை சிக்க வைக்கமுயற்சி நடக்கிறது. இதுகுறித்து நான் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மலையாள நடிகரான பாலா, அஜித் நடித்த வீரம் படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். மலையாளம், தமிழ என சில படத்தில் நடித்திருக்கும் பாலா, பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். முதல் மனைவியை பிரிந்த பாலா, 2021 ஆம் ஆண்டு இரண்டாவதாக எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

bala siruthai siva video

நடிகர் பாலா: இதையடுத்து, பாலாவின் மகள் அவந்திகா, கடந்த மாதம் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், என் அப்பா என்னை மிகவும் நேசிப்பாக பல பேட்டிகளில் கூறிவருகிறார்.ஆனால், இது உண்மை இல்லை, என் அம்மாவை குடித்துவிட்டு அடித்தது கொடுமைப்படுத்தினார். அந்த வலியை நான் இப்போது உணர்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். இதனால், தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என பேசி இருந்தார்.

தினமும் வழி மறித்து தொல்லை: இதையடுத்து, பாலாவின் முதல் மனைவி அம்ருதா, கடவாரா காவல் நிலையத்தில் பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழிமறித்து வம்பு செய்வதாக புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, காவல்துறையினர் பாலாவை ஆஜராகுமாறு அழைத்து இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகாததால், எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்து இருக்கும் பாலா, தன்னை தன் மனைவி பெரிய சிக்கலில் சிக்க வைக்க திட்டம் போடுவதாக வீடியோவில் பேசி உள்ளார்.

சதி நடக்கிறது: அந்த வீடியோவில், என் வீட்டுக்கு அதிகாலை 3.45 மணிக்கு கை குழந்தையுடன் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வந்து இருந்தார்கள். அந்த ஆண் பெல்லை அடித்து விட்டு கதவு திறக்காததால் இருவரும் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் அந்த பெண் கைக்குழந்தையுடன் வீட்டுக்கு வர என் காரணம். என்னை ஏதோ ஒரு பெரிய மோசடியில் சிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் வீடியோவை அனுப்பி இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X