Just In
- 1 hr ago
ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
- 9 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 9 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 11 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
Don't Miss!
- News
ஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொடர் உடலுறவு கொரோனா வைரஸை கொல்லும்.. அள்ளிவிட்ட சர்ச்சை நடிகை.. அடித்துத் தூக்கிய ஃபேஸ்புக்!
சென்னை: தொடர்ந்து உடல் உறவு கொள்வது கொரோனா வைரஸை கொல்லும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல இயக்குநர்களும் நடிகர்களும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.
தெலுங்கு திரைத்துறையினர் மட்டுமின்றி தமிழ் திரைத்துறையினர் மீதும் பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார். இயக்குநர் ஏஆர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுக்களை கூறினார்.

வச்சு செய்யும் நடிகை
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பலர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். மேலும் தனக்கு ஆகாதவர்கள் குறித்து தரக்குறைவாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் பவன் கல்யாண், நடிகர் விஷால், நடிகர் நானி உள்ளிட்டோரை வச்சு செய்து வருகிறார்.

எப்படி இவ்வளவு பணம்?
இயக்குநர் மிஷ்கின் - விஷால் பிரச்சனையில் தலையிட்ட ஸ்ரீரெட்டி, விஷால் நீங்கள் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள் என கேட்டு வம்பிழுத்தார். மேலும் என்னுடைய ஆதரவு எப்போதும் இயக்குநர் மிஷ்கினுக்குதான் என்றும் கூறி சம்மனே இல்லாமல் அவர்களுக்கு இடையிலான பிரச்சனையில் ஆஜரானார்.

இழிவான கருத்து
இதேபோல் பவன் கல்யாணையும் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார். பவன் கல்யாண் வீட்டில் வெளிநாட்டு பெண்ணை வைத்திருக்கிறார். அவருக்கு ஏன் இன்னும் கொரோனா வரவில்லை எனக்கேட்டு இழிவாக பதிவிட்டிருந்தார். அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பச்சையாக கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.

டிஷ்யூ பேப்பர்
அந்த வகையில் இன்று தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் கருத்திலும் ஏழரையை கூட்டியிருக்கிறார். அதாவது, திருமணமான நபரை நீ காதலித்தால் உன் வாழ்க்கையில் நீ நரகத்தை அழைக்கிறாய் என்று அர்த்தம். அவர்கள் உன்னை டிஷ்யூ பேப்பர் போன்று பயன்படுத்திக் கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.

டிஷ்யூஸும் இஷ்யூஸும்
இதேபோல் மற்றோரு பதிவில் மனைவிக்கு சொத்துக்கள் கிடைக்கும்.. காதலிக்கு டிஷ்யூஸும் இஷ்யூஸும்தான்.. என்று பதிவிட்டுள்ளார். மேலும் #stupidgirls என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அதோடு உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் குறித்தும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நிலையான செக்ஸ்
அதாவது தொடர்ந்து நிலையான உடலுறவு கொள்வது கொரோனா வைரஸை கொல்லும், அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்று எல்லாம் கிளப்பி விடாதீர்கள் என கூறியிருந்தனர்.

யார் நீக்கியது
ஆனால் அவரது அந்த பதிவு திடீரென நீக்கப்பட்டுள்ளது. அந்த பதிவுக்கான கமென்ட்ஸ்களும் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவலை கூறியதால் அவரது அந்த பதிவு நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதோடு ஸ்ரீரெட்டி பதிவிட்ட பல பதிவுகளும் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவற்றை ஸ்ரீரெட்டியே நீக்கினாரா அல்லது ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கியதா என்ற தகவல் வெளியாகவில்லை.