தமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த போட்டியாளர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் நாட்டுக்கே தான் தாத்தாவாகி விட்டதாக சுரேஷ் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் தொடக்கமாக மொத்த போட்டியாளர்களுக்கும் அசத்தலான அறிமுகம் கொடுத்தார் பிக்பாஸ்.

தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று நடிகர் கமல்ஹாசனை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய கமல் எவிக்ட்டான போட்டியாளர்களிடம் வெளியே போன பிறகு கிடைத்த அனுபவம் குறித்து கேட்டார்.

தமிழ்நாட்டுக்கே தாத்தா

தமிழ்நாட்டுக்கே தாத்தா

அப்போது பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸிலிருந்து வெளியே சென்ற பிறகு தமிழ் நாட்டுக்கே தாத்தாவாகி விட்டேன். என்னை விட பெரியவர்கள் எல்லாம் என்னை தாத்தா என்றே அழைக்கின்றனர். என்ன செய்தோம் இவ்ளோ அன்பை கொடுக்கிறார்கள் என்று தோன்றியது என்றார்.

அன்பு காட்டினாங்க

அன்பு காட்டினாங்க

அடுத்து பேசிய கேபி, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எல்லாருமே ரொம்ப அன்பு காட்டினாங்க. ஸ்மார்ட்டா விளையாடுனேன் என்று கூறினார்கள் எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு என்று கூறினார்.

ஊரே கொண்டாடுச்சு

ஊரே கொண்டாடுச்சு

அவரை தொடர்ந்து பேசிய ஷிவானி, நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. கடைசியா நான் செய்த டாஸ்க்கை ஊரே கொண்டாடுச்சு.. மக்கள் மத்தியில் நல்ல இடம் கிடைச்சுருக்கு.. சந்தோஷமா இருக்கு என்றார்.

தெரிய ஆரம்பிச்சுட்டேன்

தெரிய ஆரம்பிச்சுட்டேன்

அடுத்து பேசிய ஆஜித், மக்கள் திரும்பவும் என்னை ரிககனைஸ் பண்ணிட்டாங்க. பிக்பாஸ் வீட்டிலேருந்து போய் ஒரு வாரம் கேப்புக்குள் ஒரு படத்தில் பாட எனக்கு வாய்ப்பு கிடைச்சுது. எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சுட்டேன் என்றார்.

வாழ்க்கையை மாற்றி விட்டது

வாழ்க்கையை மாற்றி விட்டது

அடுத்து பேசிய சம்யுக்தா, வெளியே போன பிறகு ஒரு மாலுக்கு சென்றேன். மாஸ்க் போட்டுதான் சென்றேன். ஆனாலும் மக்கள் என்னை கண்டுபிடித்துவிட்டார்கள். பிக்பாஸ் என் வாழ்க்கையை மாற்றி விட்டது என்றார்.

சந்தோஷமாக இருந்தது

சந்தோஷமாக இருந்தது

அவரை தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ், வெளியே போன பிறகு எல்லாரும் சந்தோஷமாக பேசினாங்க. நல்லா விளையாடினேன் என்றார்கள். எல்லாரும் சொன்னதை கேட்ட போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்றார்.

பெரிய பரிசு கிடைத்தது

பெரிய பரிசு கிடைத்தது

அடுத்து பேசிய சனம், நான் உள்ளே வரும் போதும் வெளியே செல்லும் போதும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததாக கூறினீர்கள் அது உண்மைதான். அதை நானே உணர்ந்தேன். டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் அதை விட பெரிய பரிசு கிடைத்தது. மக்கள் மனசுல இடம் கொடுத்திருக்காங்க. நான் தமிழ் பொண்ணு இல்ல. ஆனால் என்னை தமிழ் பெண்ணாக ஏற்றுக்கொண்டார்கள். உங்களின் டிப்ஸும் அதற்கு காரணம் என கமலுகுகு நன்றி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X