twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சையில் சிக்கித் தத்தளித்த படங்கள்: ஒரு பார்வை

    By Siva
    |

    சென்னை: சில காட்சிகள் மற்றும் வசனங்களால் சர்ச்சையில் சிக்கிய சில படங்களை பார்ப்போம்.

    இந்திய திரை உலகம் இதுவரை எத்தனையோ படங்களை பார்த்துள்து. அதில் சில படங்கள் ரிலீஸாகும் முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும்.

    அப்படி சர்ச்சைகளில் சிக்கித் தள்ளாடிய படங்களில் சிலவற்றை பார்ப்போம்.

    தலைவா

    தலைவா

    விஜய் நடித்துள்ள தலைவா படத்தில் அரசியல் சம்பந்தமான வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரவே படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸாகவில்லை. அதன் பிறகு படக்குழுவினர் முதல்வரை அணுகி பிரச்சனையை தீர்த்தனர். ரம்ஜானுக்கு ரிலீஸாக வேண்டிய படம் ஒருவழியாக வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    களிமண்ணு

    களிமண்ணு

    மலையாள படமான களிமண்ணுவில் நடிகை ஸ்வேதா மேனின் நிஜ பிரசவக் காட்சியை வைத்துள்ளனர். இதனால் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    மெட்ராஸ் கஃபே

    மெட்ராஸ் கஃபே

    ஜான், ஆபிரகாம் நடித்துள்ள இந்தி படமான மெட்ராஸ் கஃபே வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று காண்பித்துள்ளனர் என்று தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மேலும் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    விஸ்வரூபம்

    விஸ்வரூபம்

    கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டியதாகக் கூறி அப்படத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசு தடை விதித்தது. கமல் ஹாஸன் பல நாட்கள் போராடிய பிறகு படம் ரிலீஸ் ஆனது.

    சின்

    சின்

    வினோத் பாண்டேவின் இயக்கத்தில் வந்த படம் சின். அதில் பாதிரியாராக வந்த ஷைனி அஹுஜா இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது போன்று காண்பிக்கப்பட்டது ரோமன் கத்தோலிக்கர்களை கோபமடையச் செய்தது. இந்த படத்தின் விளம்பர துணுக்குகளை கூட ஒளிபரப்ப டிவி சேனல்கள் மறுத்துவிட்டன.

    ஃபயர்

    ஃபயர்

    பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை மையமாக வைத்து தீபா மேத்தா எடுத்த படம் ஃபயர். 1998ல் இந்த படம் வெளியானபோது மும்பை மற்றும் டெல்லியில் உள்ள தியேட்டர்களை இந்து அமைப்பினர் தாக்கினர். ஆனால் கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் படத்தை நிறுத்த அரசியல் அமைப்புகள் முயன்றபோது நிர்வாகமும், ரசிகர்களும் அதை எதிர்த்து போராடினர்.

    English summary
    Above is the list of few movies that faced agitation because of the controversial scenes or dialogues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X