திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை.. கான்ட்ராக்டர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்!
மும்பை: திருமணம் செய்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கான்ட்ராக்டர் ஒருவர் மீது பிரபல நடிகை ஒருவர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணம் செய்வதாகக் கூறி நடிகைகளை ஏமாற்றி பாலியன் வன்கொடுமை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ், கன்னட படத்தில் நடிக்கும் நடிகை ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
பெங்களூர் நிறுவன அதிகாரியான அவர், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும் அதை வைத்து பல லட்சம் ரூபாய்களை வாங்கியதாகவும் போலீசில் புகார் கூறியிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளர்
பிரபல மலையாள படத் தயாரிப்பாளர் ஆல்வின் அந்தோணி மீது 22 வயது மாடல் ஒருவர், சமீபத்தில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி நான்கு முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஆனால் படத்தில் வாய்ப்புத் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் அவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நட்சத்திர ஓட்டலில்
இந்நிலையில் மும்பை, சாந்தா குரூஸில் நடிகை ஒருவர் கான்ட்ராக்டர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். நடிகையும் கான்டராக்டரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து நடிகையுடன் பழகி வந்துள்ளார். பின்னர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து தன்னை தாக்கியதாகவும் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தாராம்.

பாலிவுட்டில் பரபரப்பு
பின்னர், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருமணம் செய்வதாகக் கூறியது பொய் என்பதும் நடிகைக்குப் பின்னர் தெரியவந்தது. இதையடுத்து மும்பை சாந்தாகுரூஸ் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











