»   »  இங்க பிக் பாஸ் வீடு பரபரக்கும்போது இந்த காமெடி பீஸு வேற...

இங்க பிக் பாஸ் வீடு பரபரக்கும்போது இந்த காமெடி பீஸு வேற...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லருக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார் பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே.

பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என்று மைக் வைக்காத குறையாக கூறி வருபவர் கேஆர்கே. ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்காரர்களை கழுவிக் கழுவி ஊத்துவதை ஒரு வேலையாக வைத்துள்ளார்.

Controversial actor KRK has offered a role to England cricketer

நம்ம ரஜினிகாந்தை கூட அழகில்லாதவர் எப்படி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று வம்பிழுத்த புண்ணியவான் இந்த கேஆர்கே. இந்நிலையில் அவர் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லரை ஹாட்டி அதாவது கவர்ச்சியானவர் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது தேஷ்த்ரோகி 2 படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கேஆர்கே.

நல்ல காலம் சாரா இங்கிலாந்துக்காரராக உள்ளார், அவரே பாகிஸ்தான்காரராக இருந்தால் உங்களை கொத்து பரோட்டா போட்டிருப்பார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.

English summary
Bollywood critic KRK has called England skipper Sarah Taylor as hottie and even offered heroine role in his movie Deshdrohi 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil