Don't Miss!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தவறான முடிவெடுத்துத்துட்டு உட்கார்ந்து அழுவாங்களாம்... உங்க ராசி என்ன?
- Sports
செஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனை
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Technology
டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸில் சொன்னதெல்லாம் பொய்யா.. முகெனின் காதலி வேறு ஒருவரை காதலிக்கிறாரா.. வைரலாகும் போட்டோக்கள்!
சென்னை: முகெனின் காதலி நதியா வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்நபர் நதியாவின் காதலர் என தகவல் வெளியாகியுள்ளதால் முகென் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னராகி இருப்பவர் மலேசியாவைச் சேர்ந்த பாடகர் முகென். பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் அனைவருக்கும் பிடித்தமான போட்டியாளராக வலம் வந்த முகென், அபிராமியுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். முகெனைக் காதலிப்பதாக அபிராமி கூற, அவரோ தனக்கு மலேசியாவில் ஒரு காதலி இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார். அதோடு அபி தனக்கு நல்ல தோழி மட்டுமே என்பதையும் அவர் தெளிவு படுத்தி வருகிறார்.
முகென் இறுதிப்போட்டிக்கு நுழைந்த சில நாட்களில் முகென் காதலிப்பதாக சொன்ன நதியா முதன்முறையாக முகெனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனால் நதியாவும் முகெனைக் காதலிக்கிறார் என்பதை ரசிகர்கள் உறுதி செய்தனர்.
ஒரு கோடி ரூபாயில் ரஜினி வீடு வாங்கித் தந்த விவகாரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைஞானம்!

சம்மதம்
டைட்டிலை வென்ற பிறகு அளித்த பேட்டி ஒன்றில், முகெனிடம், ‘உங்கள் காதலை நதியாவிடம் சொல்லி விட்டீர்களா அவருடைய பதில் என்ன ? அவர்கள் அதற்கு சம்மதித்து விட்டார்களா ?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிரித்தபடி, "ஆம், எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க. இன்னும் சிறிது நாளில் அதனை நாம் ரசிகர்களுக்கு அறிவிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன்" என்றார்.

நதியாவின் காதலர்?
இதனால் முகெனின் காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது என அவரது ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் முகெனின் காதலில் தற்போது புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. முகென் காதலிப்பதாகக் கூறப்படும் நதியா வேறு ஒருவரை கடந்த 6 வருடங்களுக்கு மேலாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வைரலாகும் புகைப்படங்கள்
தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதோடு, முகெனின் காதலுக்கு நதியா இதுவரை சம்மதம் கூறவில்லை என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், முகெனுக்கு நதியா மீது வெறும் க்ரஷ் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முகெனின் கவனம்
தற்போது பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ள முகென், திரை துறையில் சாதிப்பது குறித்து தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளதாகவும், காதல் பற்றி அவர் யோசிக்கப் போவதில்லை எனவும் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ முகெனோ அல்லது நதியாவோ இது குறித்து உரிய விளக்கம் அளித்தால் தான் உண்மை வெளியில் வரும்.