'வடசென்னை'.... ஆண்ட்ரியா - அமீர் முதலிரவுக் காட்சி நீக்கம்!
வடசென்னை படத்தில் இருந்து ஆண்ட்ரியா - அமீர் முதலிரவுக் காட்சி நீக்கப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னை: வடசென்னை படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நிறைய கெட்டவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

படத்தில் அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சிக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து வடசென்னை படத்தில் இருந்து ஆண்ட்ரியா - அமீர் முதலிரவுக் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் கெட்டவார்த்தை வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்


Click it and Unblock the Notifications











