பர்ஸ்ட் அமலா பால்... இப்ப காஜல், ஹன்சிகா... சர்ச்சைகளில் குளிர்காயும் தமிழ் சினிமா!

சர்ச்சைகளை உருவாக்கி படங்களுக்கு பப்ளிசிட்டி தேடும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

Recommended Video

கால்பந்து பயிற்சியாளராக அவதாரம் எடுத்த விஜய் | சர்ச்சைகளில் குளிர்காயும் தமிழ் சினிமா!- வீடியோ

சென்னை : தங்களுடைய படங்களுக்கு இலவச விளம்பரம் தேடுவதற்காக வலிய வந்து சர்ச்சைகளில் சிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் சர்ச்சை என்ற வார்த்தையை கேட்டாலே திரைத்துறையில் நடுக்கம் ஏற்படும். எந்த சர்ச்சையிலும் சிக்காமல் நடிகர், நடிகையர் உள்பட அனைவருமே தங்கள் இமேஜை பார்த்துக்கொள்வர்.

ஆனால் இன்று ஏதாவது சர்ச்சையில் சிக்க மாட்டோமா என்று ஏங்கும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. மக்கள் தங்களை பற்றியும், தங்கள் படங்களை பற்றியும் தொடர்ந்து பேச வேண்டும் என சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள்.

சர்கார் சர்ச்சை

சர்கார் சர்ச்சை

கடந்த ஆண்டு வெளியான சர்கார் திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. இதுவே அந்த படத்துக்கு இலவச விளம்பரமாக மாறியது. ஊரெங்கும் இதே பேச்சாக இருந்ததால், படம் வசூல் வேட்டையாடியது. இதற்கு முன்பு வெளியான விஜய்யின் மெர்சல் படத்துக்கும் இதேபோன்ற இலவச விளம்பரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை நாயகி அமலா பால்

சர்ச்சை நாயகி அமலா பால்

நடிகை அமலா பால் அடிக்கடி தனது படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புகிறார். தம்மடிப்பது, தண்ணியடிப்பது போன்ற அவரது புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக மாறியது. அதேபோல் ஆடை படத்தில் அவரது தோற்றம் விமர்சனத்துக்கு உள்ளானது.

கெட்டப் பேச்சு வடசென்னை

கெட்டப் பேச்சு வடசென்னை

வடசென்னை படத்தில் கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பினர். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வசனங்கள் அதிகம் விவாதத்துக்கு ஆளானது. இதற்கு மீனவ மக்களும், வடசென்னை மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, சில காட்சிகள் நீக்கப்பட்டன.

காஜல் அகர்வாலின் சர்ச்சை

காஜல் அகர்வாலின் சர்ச்சை

சமீபத்தில் காஜல் அகர்வால் ஒரு பெரும் சர்ச்சையை உருவாக்கினார். அவர் நடிப்பில் வெளிவர உள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசரில், காஜலின் மார்பை பிடித்து ஒரு பெண் அழுத்துவது போல் ஒரு காட்சி இடம்பெற்று பேசுபொருளாக மாறியது.

பெரிய விளம்பரம் எதிர்பார்க்கும் ஹன்சிகா

பெரிய விளம்பரம் எதிர்பார்க்கும் ஹன்சிகா

தனது 50வது படமான மஹாவிற்கு பெரிய அளவில் விளம்பரம் எதிர்பார்க்கிறார் ஹன்சிகா. இதற்கான வலிய வந்து சர்ச்சைகளில் சிக்குகிறார். இதுவரை வெளியான படத்தின் போஸ்டர்கள் அனைத்துமே சர்ச்சையை கிளப்புகின்றன. இனி என்ன மாதிரி வெடிகுண்டுகளை எறியப்போகிறார் என்பது தெரியவில்லை.

இந்தநிலை மாற வேண்டும்

இந்தநிலை மாற வேண்டும்

இப்படி ஒவ்வொரு படத்துக்கும் வலிய வந்து சர்ச்சைகளையும், பஞ்சாயத்துகளையும் உருவாக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இதை சரி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் தயாரிப்பாளர் சங்கமே பெரிய பஞ்சாயத்தில் இருக்கிறது. இந்த போக்கை சரிசெய்யாவிட்டால் பெரும் ஆபத்து தங்களுக்கு தான் என்பதை திரைத்துறையினர் விரைவில் உணர வேண்டும். மக்களின் சிந்தனையை மலிவாக்கும் இந்த போக்கு மாற வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X