தமன்னா குறித்து சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட இயக்குனர் பார்த்திபன்!
சென்னை: கடந்த வாரம் தியேட்டரில இந்தியன் 2 மற்றும் டீன்ஸ் என இரு படங்கள் வெளிவந்தது. இதில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாக்கி, நடித்திருந்தார். முதல் நாள் இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பார்த்திபன் பேட்டி அளித்திருந்தார். அதில் தமன்னா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பார்த்திபன் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
இரவின் நிழல் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் இயக்கியுள்ள படம் டீன்ஸ். பயாஸ்கோப் மற்றும் அகிரா ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையத்துள்ளார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், அஸ்மிதா மகாதேவன்மோர், ரஞ்சித் தண்டபாணி, பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

பார்த்திபன் டீன்ஸ்: மூட நம்பிக்கைக்கு எதிராக சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவான இத்திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி கமலின் இந்தியன் 2 படத்துடன் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமான இப்படத்துடன் டீன்ஸ் வெளியானது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இந்தியன் 2 திரைப்படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்தால் டீன்ஸ் படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டு படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இரண்டாவது நாளில் இருந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல பிக்கப் ஆன பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 90 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமன்னா குறித்து சர்ச்சை பேச்சு: படம் வெற்றி குறித்து பல விஷயத்தை பேசிய பார்த்திபன், இப்போது எல்லாம் படத்தில் கதை இருக்கா என்பதையாரும் பார்ப்பதில்லை, படத்தில் தமன்னாவின் டான்ஸ் இருக்கா என்று தான் பார்க்கிறார்கள் அவர்களின் டான்ஸ் இருந்தால், அந்த படம் ஹிட்டாகிவிடும் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், தாமன்னாவின் தீவிர ரசிகரான பார்த்திபன் கூறியது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடலையும், அரண்மனை படத்தில் கடைசியாக சம்மந்தமே இல்லாமல் வந்த பாடலைத்தான் கூறுகிறார் என் நெட்டிசன்கள் இதனை வைரலாக்கினர்.
பார்த்திபன் மன்னிப்பு: இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நண்பர்களே.. ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











