வளர்ந்ததும் அப்படி பேசுவார்கள்.. ஃப்ளாஷ்பேக்கை நினைப்பேன்.. சிவகார்த்திகேயனை தாக்கினாரா ஈரோடு மகேஷ்?
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்திருக்கிறார். இவற்றில் மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பராசக்தி திரைப்படம் அடுத்த வருடம் வரவிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு மகேஷ் பேசிய வீடியோ ஒன்றை வைத்து அவர் சிவகார்த்திகேயனைத்தான் தாக்கி பேசியிருக்கிறார் என சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்கள் வரிசைக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம்தான் அந்த இடத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. மிகப்பெரிய ஹிட்டடித்த அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. வசூல் ரீதியாக மடுமின்றி விமர்சன ரீதியாகவும் அந்தப் படம் கொண்டாடப்பட்டது. முக்கியமாக சிவகார்த்திகேயனின் பாடி லாங்குவேஜும், நடிப்பும் வேறு ஒரு பரிமாணத்தில் இருந்ததாக கூறினார்கள் ரசிகர்கள்.
அடுத்த படம்: அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் சம்பளத்தை உயர்த்தி வைத்திருக்கிறது. அதன்படி 50 கோடி ரூபாய்வரை அவர் சம்பளமாக வாங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அமரன் படத்தில் நடித்து முடித்த அவர்; அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமானது செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முருகதாஸ் தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்துவருவதால் இப்படமாவது வெற்றியடையுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பராசக்தி: மதராஸி திரைப்படம் மட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்துவருகிறார் எஸ்கே. இப்படத்தில் அவருடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்த வருடம் ரிலீஸாகவிருகும் இப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற; எஸ்கே உள்ளே வந்தார்.
எப்படி இருக்கும்?: சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடித்துவருவதால் படத்தில் அவர் எப்படி இருப்பார்; மாஸ் சீன்களுக்கெல்லாம் பஞ்சம் இருக்காதே என்று ஏகப்பட்ட கேள்விகளை சிவாவின் ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு அநேகமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிப்பதாக இருந்த படத்தின் பணிகள் தொடங்கிவிடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மகேஷ் பேசியிருக்கும் வீடியோ ஒன்று புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
என்ன வீடியோ?: பன் பட்டர் ஜாம் படத்தின் விழாவில் பேசிய மகேஷ், "எல்லோரும் வளரும்வரை நம்மிடம் அண்ணே அண்ணே என்று நன்றாக பேசுவார்கள். பிறகு ப்ரோ என்று சொல்வார்கள். அதற்கு பிறகு நம்மிடமே வந்து 'எப்படி போகிறது.. நீங்கள் எல்லாம் நன்றாக வர வேண்டும்' என்று சொல்வார்கள். நான் உடனே ஃப்ளாஷ்பேக்கை ஓட்டி பார்ப்பேன். எப்போதுமே நான் அமைதியாக இருப்பேன். அதுதான் நல்லது என்றும் நினைப்பேன். சரி தம்பி நன்றாக வரட்டும்; அவரது உழைப்பு அவர் வருகிறார் என்று நினைத்துக்கொள்வேன்.
அவர்கள் வாய் அவர்கள் பேசுகிறார்கள். நாம் எதற்கும் கொந்தளித்துவிடக்கூடாது என்று இருப்பேன். அனைத்து சூழ்நிலைகளிலும் மனநிலையை சமநிலையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் வாழ்க்கை எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது. அப்படி இருந்தால் எந்த டென்ஷனும் இல்லை" என்றார். இதனைப் பார்த்த நெட்டிசன்களோ, ஈரோடு மகேஷ் சிவகார்த்திகேயனைத்தான் தாக்கி பேசுகிறாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேசமயம் இன்னொரு தரப்பினரோ அவர் எஸ்கேவை சொல்லவில்லை கவினாகக்கூட இருக்கலாம் என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











