Dhurandhar 2: துரந்தர் ரிலீஸ் தேதிகளும்.. அரசியல் பின்னணிகளும்.. இப்படி ஒரு நோக்கம் இருந்ததா?

சென்னை: துரந்தர் 2 படம் வெளியாகி தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு உள்ளது. அதுவும் தமிழ்நாட்டை காட்டிலும் வட இந்தியாவில் அதிக அளவில் வசூலைக் குவித்து வருகிறது. முதல் பாகத்தை பாராட்டிய பலருமே இரண்டாம் பாகத்தை தாளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்; அதற்கு காரணம் படத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்கப்பட்ட பில்டப் சீன்களை பலரும் கலாய்த்து வருகிறார்கள். மேலும் பலர் துரந்தர் படம் உண்மை சம்பவங்களை மைய்யமாக கொண்டது. இப்படி இருக்கும்போது பிரதமர் மோடி காலத்தில் நடந்து போல அவருக்கு பில்டப் சீன்கள் கொடுத்ததை எல்லாம் பலரும் ஆதரங்களுடன் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, படத்தின் இயக்குநர் படம் முழுவதும் இந்திய நாட்டின் கோஷமாக "பாரத் மாதா கீ ஜெய்" என்பது போல காட்சி படுத்தி உள்ளார். ஆனால் சுதந்திர இந்தியாவிற்கு முன்னர் இருந்தே அதாவது 1880 கால கட்டங்களில் இருந்தே இந்தியா தேசத்தின் முழக்கமாக இருந்தது, "வந்தே மாதரம்" என்ற முழக்கம் தான். தமிழ் சினிமாவான, அமரன் படத்தில் ஒரு காட்சியில் பாரத் மாதா கீ ஜெய் என்ற வார்த்தைகளை இந்திய ராணுவ வீரர்கள் கூறுவது போன்ற காட்சி இருந்ததற்கே பலரும் விமர்சித்தனர்.

Controversy Around Dhurandhar 2 Modi References Slogans amp amp Timing Questioned
Photo Credit:

பாரத் மாதா கீ ஜெய் என்பது, இந்துத்துவ அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சிட்யினரும் தங்களது கட்சி நிகழ்ச்சிகளில் எழுப்புகிற கோஷம். அதை படம் முழுவதும் வைத்தது கேள்விக்குரியது தான். சுதந்திர போராட்டத்தில் முன் நின்ற காந்தியும் நேருவும் முழங்கியது வந்தே மாதரம் தானே தவிர பாரத் மாதா கீ ஜெய் அல்ல. மாறாக ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை நாடு ஆங்கிலேய இந்தியாவில் இருந்து முழங்கி வருகிறது. இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், பாரத் மாதா கீ ஜெய் என்ற வார்த்தையை இயக்குநர் திட்டமிட்டே திணித்து உள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

அடுத்ததாக மிகவும் முக்கியமாக துரந்தர் படத்தின் ரிலீஸ் தேதிகள். துரந்தர் மொத்தம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் முதல் பாகம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், இரண்டாவது பாகம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த இரண்டு தேதிகளின் அடுத்தடுத்த தேதிகளுக்கும், இந்திய இஸ்லாமியர்களுக்கும் மிகவுமே தொடர்பு உள்ளது.

Controversy Around Dhurandhar 2 Modi References Slogans amp amp Timing Questioned
Photo Credit:

ரிலீஸ் தேதிகள்: அதாவது துரந்தர் முதல் பாகம் ரிலீஸ் செய்யப்பட்ட தேதி, டிசம்பர் 5, டிசம்பர் 6ஆம் தேதி என்பது பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம். அதேபோல், மார்ச் 21ஆம் தேதி அதாவது இரண்டாவது பாகம் வெளியாகி இரண்டு தினங்களில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. சரியாக இஸ்லாமியர்களுக்கு மிகவும் தொடர்புடைய நாட்களைத் தேர்வு செய்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள் என்றால், அதில் உள்நோக்கம் இல்லை, அவை இரண்டுமே தற்செயலாக நடைபெற்றது போலத் தெரியவில்லை. மாறாக திட்டமிட்டே இந்த படங்களை இந்த தேதிகளில் ரிலீஸ் செய்துள்ளனர் என்றே பார்க்க முடிகிறது.

நோக்கம் இதுவா?: இதற்கான நோக்கம் இந்த இரு தேதிகளிலும் வழக்கத்தைக் காட்டிலும் இஸ்லாமிய மக்கள் குறித்து பேச்சு அதிகம் இருக்கும். அப்படி இருக்கையில், இந்தியா இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்கள் என்ற காரணத்திற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் போல இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற சித்தரிப்பை சனாதன அமைப்புகள் பல ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றன. மாட்டுக்கறி வைத்திருந்தால் அவர்களை அடித்தே கொல்வது வரையிலான கோர சம்பவங்களை சனாதன சிந்தனைகளை உள்வாங்கிய மக்கள் செய்ததை சம காலத்திலும் பார்த்து வருகிறோம். இப்படியான மக்களை மேலும் தூண்டிவிடும் நோக்கத்தோடு இந்த படத்தை

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X