பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார் செய்யும் கோளாறுகள்..விக்ரமன்-அசீம் நேரடி மோதல்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் செய்யும் கோளாறுகளால் நேற்று இரவு சர்ச்சை வெடித்தது.

அசல் கோலார் தனக்குத்தானே அந்த பெயரை சூட்டிக்கொண்டது எவ்வளவு பொருத்தம் என்று பிக் பாஸ் வீட்டில் அவருடைய நடத்தைகள் நிரூபிக்கிறது.

அடிக்கடி பெண்கள் பக்கமே சுற்றிக் கொண்டிருக்கும் கோலார் பெண் போட்டியாளர்களை சீண்டிய நிலையில் தனலட்சுமியை சீண்ட மோதல் பெரிதாக வெடித்தது.

 ஆண், பெண் பேதம் பார்க்காத பிக்பாஸ் வீடு

ஆண், பெண் பேதம் பார்க்காத பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக வருபவர்கள் பெரும்பாலும் திரைத்துறை, சின்னத்திரை சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் ஆண், பெண் என்ற பேதம் பெரும்பாலும் இருக்காது. போடா வாடா என்று பேசுவது, கட்டி அணைத்துக் கொள்வது என்று சராசரி நடுத்தர குடும்பங்களில் கூட இல்லாத ஒரு வகையான பழக்கத்தை அவர்களிடம் பார்க்கலாம். இது சாதாரணமாக குடும்பத்திலிருந்தும், கிராமத்திலிருந்தும் பிக் பாஸ் வீட்டிற்கு வருபவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் இவர்கள் இதே போன்ற வாழ்க்கை முறையில் பழகி விட்டதால் அது பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள்.

 கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி

கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி

இந்த சீசனில் இதே போன்று மேல் தட்டு வர்க்கத்திலிருந்து பலர் வந்தாலும் அசல் கோலார், ஷிவின்கணேசன், தனலட்சுமி, ஜி.பி.முத்து போன்றோர் சாதாரண இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அதிலும் ஜி.பி.முத்து கிராமத்தில் இருந்து வந்தவர். அவருக்கு கணவனை மனைவி நீ, வா போ என்று பேசினால் கூட பிடிக்காதாம். வாடா போடா என்று சொல்வதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்று மைனாவிடம் அது குறித்து வாதம் செய்து கொண்டிருந்தார். இன்னொரு புறம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கடந்த எந்த சீசனிலும் பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக தகவல் இல்லை. பாலாஜி முருகதாஸ் ஒரு தடவை சனத்திடம் அத்துமீறி பேசி வாங்கி கட்டிக் கொண்டார். மகத் உள்ளிட்ட சிலர் தவறாக நடந்து கொண்டு கமல்ஹாசனிடம் வாங்கி கட்டிக் கொண்டார்கள்.

 எந்த சீசனிலும் இல்லாத உரசல் பார்ட்டி அசல் கோலார்

எந்த சீசனிலும் இல்லாத உரசல் பார்ட்டி அசல் கோலார்

ஆனால் தொடர்ந்து பெண்களை கேவலமாக பேசுவது, அவர்களை ஒட்டி உரசியபடி இருப்பது என்பது எந்த சீசனிலும் போட்டியாளர்களிடம் இல்லை என்று சொல்லலாம். காதல் இருந்தது, ஒன்றாக சுற்றுவார்கள், ஆனால் அவதூறான செயல்கள் இருந்தது இல்லை. இந்த சீசனில் புதிதாக வந்த அசல் கோலார் வந்ததிலிருந்து பெண்கள் பக்கமே சுற்றி திரிவதும், அவர்களிடம் வம்பு பேசிக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. இதுகூட பெரிய வயதானவர்களிடம் இல்லை. இளம்பெண்களிடம் மட்டும் நடக்கிறது. இதில் பலர் அவருடன் சண்டை போட்டதையும் காண முடிந்தது அவரவர்களை கண்டபடி பேசுவது, தடவிக் கொண்டிருப்பது என்று அசல் கோலார் செய்துகொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படும் பெண்கள் அவ்வப்போது எதிர்ப்பை காண்பிக்கிறார்கள். இதை மற்ற ஆண் போட்டியாளர்கள் கண்டிக்காமல் வேடிக்கையாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

 தனலட்சுமியிடம் உருவகேலியில் ஈடுபட்டா அசல் கோலார்

தனலட்சுமியிடம் உருவகேலியில் ஈடுபட்டா அசல் கோலார்

இதுபோல் அசல் கோலார் தனலட்சுமியிடம் அவருடைய உருவத்தை கேலி செய்து ஆன்ட்டி, பெரியம்மா என்று பேசி இருவருக்கும் லேசான உரசல் உண்டானது. இது பற்றி தனலட்சுமி கேட்டு கண்டித்தார். அப்போது கோலார் "இவளை பஸர் அழுத்தி வெளியே அனுப்பி இருக்க வேண்டும் அனுப்பாதது நம்ம தவறு என்று பேச தனலட்சுமி பொங்கி விட்டார். யாரைப் பார்த்து பேசுகிறாய்? நீ பெரிய ஆளா என்று தனலட்சுமி கேட்க வழக்கம்போல் அசல் கோளாறு எகிற ஹவுஸ் மேட்ஸ்கள் இருவரையும் பிரிக்க படாதபாடுபட்டனர். தனலட்சுமி சமாதானப்படுத்திய அசிம் அவரை வெளியே அழைத்துச் சென்றார். அப்பொழுது அங்கு வந்த விக்ரமன் என்ன நடந்தது என்று தனலட்சுமியை கேட்க அசீம் தனலட்சுமி வெளியே வா என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 அசீம், விக்ரமன், ஜிபி.முத்து மோதல்

அசீம், விக்ரமன், ஜிபி.முத்து மோதல்

தனலட்சுமி விக்ரமனுக்கு பதில் சொல்லும் நேரத்தில் மீண்டும் அசீம் அழைக்க விக்கிரமன் "நான் பேசிக் கொண்டிருக்கிறேன் நீங்கள் வெளியே கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்" என்று சொல்ல உங்களுக்கு என்ன பிரச்சனை நான் பிரச்சினையைத் தீர்க்க பார்க்கிறேன் என்று அசீம் விக்ரமனிடம் எகிற, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த ஜிபி.முத்து விக்ரமனிடம் நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறீர்கள் சமாதானமாக போகட்டும் என்று அவர் கூட்டிட்டு போகிறார் என்று சொல்ல விக்ரமன் அவரிடம் "ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன் எந்த பிரச்சனை இருந்தாலும் நான் கேட்டால் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள் ஒரே ஊர் என்பதால் பாசத்துடன் உங்களிடம் பழகுகிறேன் தேவை இல்லாமல் பேசாதீர்கள்" என்று விக்ரமன் கோபப்பட்டார்.

 விக்ரமனை சமாதானப்படுத்திய ராம்குமார்

விக்ரமனை சமாதானப்படுத்திய ராம்குமார்

பின்னர் ஒருவாறாக விக்ரமனை சமாதானப்படுத்தினர். பின்னர் ராம்குமாரிடம் விக்ரமன் தனியாக தன்னுடைய பிரச்சினையை பற்றி புலம்பி கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் நான் நியாயம் கேட்கும்போது நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்று பேசுகிறார்கள், நான் நியாயமே கேட்க கூடாதா? அந்த பெண் அழுதுகிட்டு போகுது என்னன்னு கேட்கக்கூட கூடாதா? கேட்டால் சமாதானம் என்கிறார்கள் என்று சொன்னார். ராம்குமார் அவரை சமாதானப்படுத்தி பிக் பாஸ் வீடு வேற மாதிரி நீங்க பார்த்து நடந்துக்கங்க என்று சொன்னார்.

 அசல் கோலாரின் கோளாறுகளை சகித்துச் செல்லும் பெண்கள்

அசல் கோலாரின் கோளாறுகளை சகித்துச் செல்லும் பெண்கள்

இத்தனை பிரச்சினைக்கும் காரணமான அசல் கோலார் எதுவுமே நடக்காதது போல் ராபர்ட் மாஸ்டர், அசீம், ஜி.பி.முத்துவுடன் சிரித்து பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்ததை காண முடிந்தது. அசல் கோலார் தொல்லைகள் ஒவ்வொரு பெண்களிடமும் தினமும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாலியல் சீண்டல் என்பதன் ஒரு வகையாகத்தான் இதை பார்க்க முடியும். ஆனால் வந்திருக்கும் போட்டியாளர்கள் இதை நாகரீகம் கருதி அனுசரித்து செல்கின்றனர். இது கோலாருக்கு வசதியாக இருக்கிறது.

 கண்ணியம் காக்கும் கமல் கேட்பாரா?

கண்ணியம் காக்கும் கமல் கேட்பாரா?

பெண்களிடம் உடல் ரீதியான சீண்டல்களை பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே அனுமதிக்கப்பட்டதில்லை. இந்த முறை அசல் கோலார் சாமர்த்தியமாக தனது செயலை செய்து கொண்டிருக்கிறார். இதை நெட்டிசன்கள் பல வீடியோக்கள், போட்டோக்களை எடுத்து போட்டு கண்டித்து வருகின்றனர். ஆனால் பிக்பாஸுக்கு மட்டும் அது தெரியவில்லை. இந்த வாரம் கமல்ஹாசன் கோலார் தனலட்சுமியிடம் நடந்துக்கொண்டதைப் பற்றி பேச வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X