Mansoor Ali Khan - மன்சூர் அலிகானுக்கு நேரம் சரியில்லை போல.. த்ரிஷா பஞ்சாயத்தோடு இதோ புது பஞ்சாயத்து
சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) நடிகர் மன்சூர் அலிகானை சுற்றி புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருக்கிறது.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவருடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியும் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவை போட முடியவில்லை. அவரை கண்ணிலேயே காட்டவில்லை. 150 படங்களில் நான் செய்யாத அட்டூழியமா” என என்றிருந்தார்.

செம பதிலடி: மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு த்ரிஷா கவனத்துக்கு செல்ல அவர் கொந்தளித்துவிட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது.
என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவர் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் நான் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மேலும் என்னுடைய கரியர் முழுவதும் அவருடன் நடிக்கமாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு இழுக்கு” என தெரிவித்திருந்தார்.
திரையுலகம் எதிர்ப்பு: த்ரிஷா மட்டுமின்றி திரையுலகிலிருந்து பலரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். தமிழ் சினிமா கலைஞர்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர் சிரஞ்சீவியும் தனது வலுவான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதேசமயம் மன்சூரோ இதுவரை ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி த்ரிஷாவுன் நான் இணைந்து மீண்டும் நடிப்பேன்; அவர் கோபப்பட்டு பேசியிருக்கிறார். நான் ஒரு கதாபாத்திரமாகத்தான் அப்படி சொன்னேன் என இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
புது பஞ்சாயத்து: இந்நிலையில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த சூழலில் புதிய பஞ்சாயத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது செய்தியாளர்களை சந்தித்து முடித்த பிறகு எழுந்து நின்ற மன்சூர் அலிகான், இந்திய தேசிய கீதத்தை பாடினார். ஆனால் அதை பாடியபோது கைகளை ஆட்டியும், தலையை கோதியபடியும் பாடினார். பாடி முடித்த பின்பு அங்கு இருந்த பத்திரிகையாளர்களில் சிலர், தேசிய கீதம் பாடும்போது இந்த ஆக்ஷன் எல்லாம் தேவைதானா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவரோ, ஏங்க நான் நின்றுகொண்டு மரியாதை செய்துதானே பாடல் பாடினேன். நீங்கள் மோடியின் ஆட்களா. என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். நான் தேசிய கீதத்தை அவமதித்ததாக கிளப்பிவிடாதீர்கள் என வாக்குவாதம் செய்தார்.


Click it and Unblock the Notifications











