'புஷ்பா'லாம் ஒரு படமா?.. அல்லு அர்ஜூனுடன் மல்லுக்கட்டும் நடிகர்கள்..டோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
சென்னை: புஷ்பா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்ததால் டோலிவுட் நடிகர்களிடையே சண்டை வெடித்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில், தெலுங்கில் வெளியான புஷ்பா பார்ட் படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூனுக்கு விருது: தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற வரலாற்று சாதனையை அல்லு அர்ஜூன் படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், இணையத்தில் புஷ்பா படத்திற்கு விருது கொடுத்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன், செம்மரங்களை வெட்டி கடத்தும் தீவிரவாதியாகவும், போலீசார் மற்றும் எதிரிகளை கொல்லும் நபராகவும் நடித்திருந்தார்.
புஷ்பா ஒரு படமா: புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு பேச்சு என அனைத்தும் உண்மையில் ரசிக்கும்படி இருந்தது, அல்லு அர்ஜூன் சிறந்த நடிகர் தான், இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்து இல்லை என்ற போதும் இதுபோன்ற தீவிரவாதி கதை அம்சத்தைக் கொண்ட கதையில் நடித்ததற்கு விருதை கொடுத்தது தவறும், அது சமுதாயத்திற்கு தேவையான படமா என்றும் கருத்துக்கள் வைரலாகி வருகின்றனர்.
டோலிவுட்டில் சர்ச்சை: நடிகர் ராம் சரணுக்கும், அல்லு அர்ஜூனுக்கு விருது கொடுத்ததில் உடன்பாடு இல்லையாம். இருந்தாலும், தெலுங்கு திரையுலகில் முதல் தேசிய விருது என்பதால் ஒப்புக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். நானி அல்லு அர்ஜூன் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என்பது போல தனது இஸ்டாகிராம் பக்கத்தில் உடைத்த இதயம் கொண்ட இமேஜை பதிவிட்டு இருந்தார்.
அப்செட்டில் மகேஷ்பாபு: ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, வெங்கடேஷ் என எந்த முன்னணி நடிகர்களும் வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளனர். மேலும், புஷ்பா படத்தின் கதையை இயக்குனர் முதலில் மகேஷ்பாபுவுக்கு தான் கூறியுள்ளார். அவருக்கும் கதை பிடித்து போக, இடையில் மகேஷ்பாபுவுக்கு இயக்குநருக்கும் மோதல்கள் உருவானதால், மகேஷ்பாபு இந்தப் படத்தை விட்டு விலகி உள்ளார். அதன் பின்தான் இந்த வாய்ப்பு அல்லு அர்ஜூனுக்கு சென்றுள்ளது. இதனால், மகேஷ்பாபு அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











