'மேயாத மான்' படத்தில் சர்ச்சையா? - பதறவைத்த தயாரிப்பாளரின் ட்வீட்!
Recommended Video

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பாக, கார்த்திகேயன் சந்தானம் என்பவரோடு இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'.
ரத்தின குமார் தான் இயக்கிய 'மது' என்கிற குறும்படத்தைத்தான் தற்போது 'மேயாத மான்' என்கிற படமாக இயக்கியுள்ளார். வைபவ், ப்ரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது நண்பரும் பாடகருமான பிரதீப் குமார் ஆகிய இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
இந்தப் படம் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தோடு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. மெர்சல் படத்திற்கு பலத்த சர்ச்சைகள் கிளம்பி படத்தை வெற்றிகரமாக ஓடவைத்தன. வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது மெர்சல்.
ஆனால், அதோடு ரிலீசான 'மேயாத மான்', 'சென்னையில் ஒரு நாள் 2' ஆகிய படங்கள் பெரிதாகப் போகவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மேயாதமான் படத்தில் சர்ச்சை எனக் கூறி ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார்.
' 'மேயாத மான்' படத்தில் ஜி.எஸ்.டி, மெடிக்கல் மாஃபியா பற்றி எதுவும் பேசவில்லை. படத்தின் கடைசி வரை எந்தச் சர்ச்சையும் இல்லை' என வைபவ் புலம்புவது போல அந்த வீடியோ உருவாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











