Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குக்வித் கோமாளி அஸ்வின் ஹீரோவானார்..காமெடியன் யார் தெரியுமா ?
சென்னை : குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதேபடத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்கிறார் புகழ்.
ஒன்னு அப்டி.. இல்லாட்டி இப்டி.. டிக்டாக் இலக்கியாவின் பப்பரப்பா போஸை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை புதுமுகம் ஹரிஹரன் இயக்க உள்ளார்.
அனைவரும் பிரபலம்
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளிக்கு மக்களிடையே தனி இடம் உண்டு. புகழ் செய்யும் சேட்டைகளை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக புகழ் தான் கண்டமேனிக்கு பிரபலமாகிவிட்டார்.
ஹீரோ மாதிரி இருக்கீங்க
குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினின் புகைப்படங்களை பார்த்தவர்களோ, ஹீரோ மாதிரி இருக்கிறீர்களே படங்களில் நடிக்க முயற்சி செய்யலாமே என்று தெரிவித்தனர். விஜய் டிவியில் இருக்கிறார் அதனால் கண்டிப்பாக பெரிய திரைக்கு செல்வார் என நம்பலாம் பல ரசிகர்கள் கூறிவந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகாமல் அஸ்வின் தற்போது ஹீரோவாகிவிட்டார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதுப்படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் ஹரிஹரன் இயக்கும் அந்த படத்தில் புகழ் தான் காமெடியாக நடிக்கிறார்.
|
பல நாள் கனவு
இதுகுறித்து அஸ்வின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எனக்குள் நான் ரொம்ப வருஷமா கேட்டுக்கிட்டு இருந்தது, கனவு, பல நாள், பல வருஷம் இதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போ ஒரு படத்துக்கு நான் ஹீரோவா நடிக்கப் போகிறேனு சொல்லிட்டு. இந்த ஷோக்கு அப்புறம் எல்லாரும் கேட்டுக்கிட்டே இருந்தீங்க. எப்போ வரப் போகுதுனு. அதற்கான விடை எனக்கு தெரியும் என்றார்.
புகழ் நடிக்கிறார்
மேலும் பேசிய அவர், இன்று நான் ஒரு படம் சைன் பண்ணியிருக்கிறேன். அந்த கம்பெனி ட்ரைடன்ட் ஆர்ட்ஸ், டைரக்டர் பெயர் ஹரிஹரன். புது டைரக்டர். ஒரு நல்ல ஸ்க்ரிப்ட்டோட ஒரு நல்ல ஃபீல் குட் படமாக கொடுக்கப் போகிறார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களுக்கு பிடித்த ஒருவர் இதில் இருக்ககப் போகிறார். எனக்கு பிடித்த ஒருவர் இருக்கப் போகிறார். அது யாருன்னா புகழ் என்றார்.
பார்த்து ரசிங்க
அஸ்வினைத் தொடர்ந்து பேசிய புகழ், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் மச்சான் ஹீரோவாக நடிக்கிறான். வேற லெவலில் பயங்கர ஹேப்பியாக இருக்கிறது. என்ன தான் குக் வித் கோமாளியில் காமெடி செய்தாலும் ஒரு ஹீரோ, காமெடியனாக எங்களால் முடிந்த என்டர்டெயின்மென்ட் கொடுப்போம். பார்த்து ரசிங்க என்றார். இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.