Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பதற்றத்தில் அப்படி பேசிட்டேன்.. யாரையும் அவமதிக்கணும்னு நினைக்கல.. நடிகர் அஸ்வின் விளக்கம்!
சென்னை: குக் வித் கோமாளி அஸ்வின் குமார் இசை வெளியீட்டு விழாவில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
Recommended Video
இசை வெளியீட்டு விழாவில் கதை நல்லா இருந்தால் தூங்கிடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என்றும் படம் நல்லா இல்லை என்றால் ரிலீஸ் பண்ண மாட்டேன் என பேசியது சர்ச்சையை கிளப்பியது.
கோடம்பாக்கத்தில் இருக்கும் சினிமா இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஸ்வினின் இந்த பேச்சால் கடுப்பாகி உள்ளனர்.
மறைந்த நடிகர் சுஷாந்தின் முன்னாள் காதலிக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா ?

வச்சு செய்த மீம்கள்
இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக இப்படி இயக்குநர்களின் உழைப்பை இழிவாக பேசுகிறாரே அஸ்வின் என்றும் பெரிய பெரிய நடிகர்களே இன்னமும் இயக்குநர்களை பழித்து பேசாத நிலையில், அஸ்வின் இப்படி பேசியதை கண்டித்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் வைரலாகி வருகின்றன.

அஸ்வின் விளக்கம்
இந்நிலையில், மீடியாக்களுக்கு தனது விளக்கத்தை நடிகர் அஸ்வின் கொடுத்திருக்கிறார். அதில், இது தான் எனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு. அத்தனை பெரிய இசை வெளியீட்டு விழா மேடையை இதுவரை கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. அங்கே நிற்கும் போது ஒரே பதற்றமாகி விட்டது. அந்த பதற்றத்தில் தான் அப்படி பேசி விட்டேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

40 கதைகள் கேட்கல
இதுவரை நான் 40 கதைகள் கேட்டதே இல்லை. சும்மா ஒரு பேச்சுக்கு அடிச்சிடுவோம்னு நண்பர்களுடன் நம்பர் பற்றிய கவலையில்லாமல் பேசுவது போல பேசிவிட்டேன். அது இந்த அளவுக்கு எனக்கே பின் விளைவுகளை கொடுக்கும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கையா
இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியதை ரொம்பவே பெருசா ஊதி பெரிதாக்குறாங்கன்னு நினைக்கிறீங்களா என்கிற கேள்விக்கு, சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கதைகளை வேண்டாம் என சொல்லி இருக்கிறேன். அவர்களுடைய ஆட்கள் தான் இப்படி இணையத்தில் மீம்களாக போட்டு என்னை தாக்குகின்றனர் என்றும் எனக்குத் தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.

சூப்பர்ஸ்டாருன்னு இயக்குநர் ஏன் சொன்னார்
இசை வெளியிட்டு விழா மேடையில் என்ன சொல்ல போகிறாய் இயக்குநர் ஹரிஹரன் உங்களை சூப்பர்ஸ்டார் என சொன்னதை பற்றி உங்கள் விளக்கம் என்ன என்கிற கேள்விக்கு, என்னை போலவே இயக்குநர் ஹரிஹரனும் மேடை பேச்சுக்காக எந்தவொரு முன் தயாரிப்பையும் செய்யவில்லை. அப்படியோ தனக்கு தோன்றியதை பேசி விட்டார். எல்லோருக்குமே தெரியும் சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர் மட்டும் தான் என்று என இந்த விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அஸ்வின் கூறி இருக்கிறார்.