குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாகும் படத்துக்கு டைட்டிலான தல அஜித்தின் சூப்பர் ஹிட் பாட்டு!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த முறை குக் வித் கோமாளி பிரபலங்கள் பலருக்கும் தமிழ் சினிமாவில் அதிகளவில் வாய்ப்புகள் குவிந்துள்ளன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களின் ஃபேவரைட்டான அஸ்வினுக்கு ஹீரோ வாய்ப்பே கிடைத்துள்ளது.
நடிகர் ஆர்யா அஸ்வினின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.

காமெடியனான புகழ்
குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று சுமார் 5 மாதங்கள் மக்களை சிரிக்க வைத்த பல பிரபலங்களுக்கும் சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் டான், விஜய்சேதுபதி, சந்தானம் என ஏகப்பட்ட நடிகர்களின் படங்களில் காமெடியனாக புகழ் கலக்கி வருகிறார்.

ஹீரோயினான பவித்ரா, தர்ஷா
அழகு பதுமைகளாக குக் வித் கோமாளி 2வில் வலம் வந்த பவித்ரா லக்ஷ்மி மற்றும் தர்ஷா குப்தா இருவருமே ஹீரோயின் ஆகி விட்டனர். ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா நடித்து வருகிறார்.
Recommended Video

சிவகார்த்திகேயன் படத்தில் சிவாங்கி
அஸ்குமாரோ பாடலில் இடம்பெற்ற சிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் காமெடி நடிகையாக நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினை அப்படி ரொமான்ஸ் பண்ண சிவாங்கிக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த நிலையில், அஸ்வின் இப்போ ஹீரோவாகவே ஆகி விட்டார்.

டைட்டிலை வெளியிட்ட ஆர்யா
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் புதிய படத்தின் டைட்டிலை நடிகர் ஆர்யா வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சூப்பரான டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் ஆர்யா அஸ்வின் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

என்ன டைட்டில்
தல அஜித் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பாடும் "என்ன சொல்ல போகிறாய்" என்கிற பாடல் வரிகள் தான் படத்தின் டைட்டிலே. இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படம் அஸ்வினுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய என்ட்ரியாக அமைய வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











