அஸ்வின் ரொம்ப ஹாப்பி.. கோலாகலமாக அரங்கேறிய குக் வித் கோமாளி அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் பட பூஜை!

சென்னை: ஹீரோவாக வேண்டும் என்கிற கனவு இறுதியாக பலித்து விட்டதை நினைத்து மிகவும் ஹாப்பியாக உள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்.

ஒவ்வொரு இயக்குநர்களிடமும் கதை கேட்கும் போது தான் தான் ஹீரோ என நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு சின்ன கேரக்டர் மட்டுமே நீங்க பண்றீங்க என சொல்லும் போது உள்ளுக்குள் வலிக்கும் என பேட்டி ஒன்றில் கூறிய அஸ்வின் கடைசியில் ஹீரோவாகவே மாறிவிட்டார்.

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் அஸ்வின் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அஸ்வின் படத்துக்கு பூஜை

அஸ்வின் படத்துக்கு பூஜை

குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மனங்களில் இடம்பெற்ற நடிகர் அஸ்வின் ஹீரோவாக கமீட் ஆகியுள்ள என்ன சொல்ல போகிறாய் எனும் படத்தின் பூஜை இன்று டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் லைவ் வீடியோவை டிரைடன்ட் ஆர்ட்ஸ் யூடியூப் தளத்திலேயே வெளியிட்டனர்.

ஹீரோ அஸ்வின்

ஹீரோ அஸ்வின்

துணை நடிகராக நடித்து வந்த அஸ்வின் குட்டி பட்டாஸ் வீடியோ ஆல்பம் பாடலில் ஹீரோவாக கலக்கி இருந்தார். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற அவருடைய நீண்ட ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது. அஸ்வின் நடிப்பில் உருவாக உள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

புகழ் தான் காமெடி

புகழ் தான் காமெடி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலாட்டா காமெடி செய்து வந்த நடிகர் புகழ் சிவகார்த்திகேயனின் டான், விஜய்சேதுபதியுடன் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில், தனது நண்பன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திலும் காமெடியனாக கலக்க உள்ளார்.

ரெண்டு லட்டு

ரெண்டு லட்டு

விளம்பர படங்களில் நடித்து வரும் பெங்களூரு மாடலான அவந்திகா மற்றும் கவினின் அஸ்குமாரோ பாடலில் நடனமாடிய தேஜு என இரண்டு நடிகைகள் அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த இருவரில் யாரிடம் அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என கேட்கப் போகிறார் என்பது படம் வெளியானால் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X