க்யூட் பொண்ணு பாலோ மீ... என்ன சொல்லப் போகிறாய் படத்தின் கலக்கல் பாடல் வெளியீடு

சென்னை : குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் என்ன சொல்லப் போகிறாய்.

இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். விவேக் -மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

 நடிகர் அஸ்வின்

நடிகர் அஸ்வின்

குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்ந்தவர் அஸ்வின். மிகவும் பிரபலமடைந்துள்ள இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் என்ன சொல்லப் போகிறாய். படத்தை இயக்கியுள்ளார் ஹரிஹரன்.

 குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

படத்தில் தேஜு அஸ்வின் மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய புகழ் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் படத்தில் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

 நாயகனாக அறிமுகம்

நாயகனாக அறிமுகம்

இந்தப் படத்தின் மூலம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ரவீந்திரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் டைட்டிலை நடிகா ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

 இரண்டாவது பாடல் வெளியீடு

இரண்டாவது பாடல் வெளியீடு

தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். விவேக் -மெர்வின் இசையில் க்யூட் பொண்ணு எனத் துவங்கும் அந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

 வரவேற்பை பெற்ற முதல் பாடல்

வரவேற்பை பெற்ற முதல் பாடல்

அறிவு இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ளார். முன்னதாக கடந்த மாதத்தில் வெளியான முதல் சிங்கிளும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் பாடல்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இரண்டு பாடல்களும் மெலடியாகவே வெளியாகியுள்ளது.

 வெற்றி பெறுவாரா அஸ்வின்

வெற்றி பெறுவாரா அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிறப்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளவர் அஸ்வின். இவர் மற்றும் கோமாளி ஷிவாங்கியின் லூட்டிகள் அந்த நிகழ்ச்சியில் மிகவும் வரவேற்பு பெற்றது. அந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து அதில் இடம்பெற்றவர்கள் அனைவரும் பெரியத் திரையில் கால் பதித்து வருகின்றனர். அவர்களுக்கு பெரியத்திரை கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X