Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நமக்கு நம்ம மட்டும் தான்...அஸ்வினின் அடுத்த சிங்கிள் வீடியோ பாடல்
சென்னை : விஜய் டிவி ஷோக்களில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் அஸ்வின். சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி இறுதி சுற்றில் கனி டைட்டிலை வென்றார். இரண்டாம் இடத்தை ஷகீலா பிடித்தார்.
கார்த்தி – மித்ரன் இணையும் புதிய படம்...அப்டேட் வெளியிட்ட படக்குழு
இந்த நிகழ்ச்சி மூலம் அதிகம் புகழ்பெற்றவர்கள் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ர லட்சுமி, சிவாங்கி, புகழ், பாலா ஆகியோர். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் இவர்களுக்கு பல வாய்ப்புக்கள் தேடி வருகின்றன.
இணையத்தை கலக்கும் குட்டி பட்டாஸ்
அப்படி அஸ்வின் நடித்து சமீபத்தில் வெளிவந்த குட்டி பட்டாஸ் என்ற சிங்கிள் வீடியோ பாடல், மிகவும் பிரபலமாகி, இணையத்தில் வைரலானது. இளைஞர்கள் பலரின் மனம் கவர்ந்த பாடலாக இந்த பாடல் மாறி உள்ளது. இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடி, அதை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வைரலாக்கி உள்ளனர்.
அடுத்த சிங்கிள் பாடல் வருது
இதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு சிங்கிள் வீடியோ பாடலில் அஸ்வின் நடிக்க உள்ளார். லோனர் என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நமக்காக நம்ம மட்டும் தான்
லோனர் சிங்கிள் பாடலின் போஸ்டருடன் அஸ்வின் பதிவிட்டுள்ள கேப்ஷனில், நமக்காக நம்ம மட்டும் தான் இருப்போம். இது தனியானவர்களுக்கான பாடல் என குறிப்பிட்டுள்ளார். அஸ்வினின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. வைரலாகி வரும் இந்த பதிவை இதுவரை சுமார் 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
ஹீரோவாகும் அஸ்வின்
அஸ்வின் தற்போது கவுரவம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
காமெடி படத்தில் புகழ்
அறிமுக இயக்குனரான ஹரி இயக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஸ்வினுடன், குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.