பிக்பாஸ் சீசன் 5 ல் நான் இருக்கேனா? இல்லையா?...தெளிவாக விளக்கிய கனி

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 பற்றி பல தகவல்கள், சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் ஒன்று தான் போட்டியாளர்கள் பற்றிய உத்தேச பட்டியல். இது பல சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் நடிகர் நகுல் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் பரவியது. இதனை மறுத்து நகுல் வீடியோ வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து அதிகமாக பேசப்படுவது குக் வித் கோமாளி கனி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் பரவியதும், அவரது ரசிகர்கள் பலர் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட துவங்கி விட்டனர்.

வீடியோ வெளியிட்ட கனி

ஆனால் கனி பங்கேற்பது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த வதந்திகளை மறுத்து, கனியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை பிக்பாஸ் தொடர்பாக யாரும் தன்னிடம் பேசவில்லை என விளக்கி உள்ளார்.

இனி வந்தா சொல்றேன்

இனி வந்தா சொல்றேன்

தனது யூட்யூப் சேனலில் கனி வெளியிட்ட வீடியோவில், பிக்பாஸ் குழுவிடம் இருந்து எனக்கு எந்த அழைப்போ, பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை. ஒருவேளை இனி அப்படி ஏதாவது வந்தால் கண்டிப்பாக நான் உங்களுக்கு அப்டேட் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

பிக்பாசுக்கு போகாதீங்க

பிக்பாசுக்கு போகாதீங்க

மேலும் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான எந்த சாத்தியகூறுகளும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தி விட்டார். இதில் கனியின் ஃபாலோவர்கள் பலர் பிக்பாசிடம் இருந்து அழைப்பு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இறுதி போட்டியாளரான கனி

இறுதி போட்டியாளரான கனி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற கனி, இறுதிப் போட்டி முதல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளராக பார்க்கப்படுவதால், அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

பல சர்ப்ரைஸ் காத்திருக்காம்

பல சர்ப்ரைஸ் காத்திருக்காம்

அதே சமயம், பல பிரபலங்களிடம் பிக்பாஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் தமிழ் ரசிகர்களை கவர பல சர்ப்ரைஸ்களை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த போட்டியை கமல் தொகுத்து வழங்குவாரா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை வெளியிட விஜய் டிவி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X