குக் வித் கோமாளி பிரபலம் புகழ்.. காதலியை ரகசிய திருமணம் செய்தாரா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: குக் வித் கோமாளி பிரபலமான புகழ் தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Pugazh -க்கு திருமணம் நடத்திருக்கா? உண்மை என்ன Pugazh விளக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் ரம்யா பாண்டியனிடம் கெமிஸ்ட்ரி என்ற பெயரில் நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.

சீசன் 2வில் கோமாளியாக

சீசன் 2வில் கோமாளியாக

தனது எதார்த்தமான நகைச்சுவை, டைமிங் சென்ஸ், பாடி லாங்குவேஜ் என பெரும் ரசிகர் பட்டாளத்தை கூட்டி வைத்துள்ளார் புகழ். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற புகழ், பவித்ரா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர் என பலருடனும் காமெடி செய்து கலக்கினார்.

வலிமை படத்தில் புகழ்

வலிமை படத்தில் புகழ்

புகழின் திறமையால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடிப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் சந்தானத்தின் சபாபதி படத்திலும் புகழ் நடிப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டான்

சிவகார்த்திகேயனின் டான்

இதனிடையே ஆக்ஷன் இயக்குநரான ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் புகழ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதேபோல் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் புகழ்.

பரம்பரையில் முதல் முறையாக

பரம்பரையில் முதல் முறையாக

அண்மையில் புகழ் சொந்தமாக கார் வாங்கினார். தன்னுடைய பரம்பரையிலேயே முதல் முறையாக தான் கார் வாங்கியிருப்பதாக கூறி வீடியோவை வெளியிட்டு உருக வைத்தார்.

புகழ் திருமணம்?

புகழ் திருமணம்?

இந்நிலையில் நடிகர் புகழ் குறித்த செய்தி ஒன்று கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நடிகர் புகழ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அண்மையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

மேலும் அந்த பெண் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் ரகசியமாக நடைபெற்றதாகவும், இதில் புகழுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து நடிகர் புகழ் விளக்கம் அளித்துள்ளார்.

சிரிப்புதான் வருது

சிரிப்புதான் வருது

அதாவது, தான் சிங்கிள் தான் இப்படிப்பட்ட செய்திகளை பார்த்தால் தனக்கு சிரிப்புதான் வருகிறது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் ஷிவாங்கி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக ஒரு வீடியோ மார்ஃபிங் செய்து வெளியிடப்பட்டது.

இப்போதுதான் தொடங்குகிறேன்

இப்போதுதான் தொடங்குகிறேன்

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ உண்மையல்ல என்றும், தான் இப்போதுதான் தனது சினிமா வாழ்கையின் தொடக்கத்தில் இருப்பதால் அதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: pugazh புகழ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X