சிம்புவுடன் குக் வித் கோமாளி புகழ்.. மாநாடு படப்பிடிப்பில் நடந்த ஜாலியான ரகளை.. வைரலாகும் போட்டோ!
சென்னை: மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு.
சென்னையில் அந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிம்புவின் மாநாடு
மாநாடு படம் நடிகர் சிம்புவுக்கு நல்லதொரு கம்பேக் ஆக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள மாநாடு திரைப்படம் சென்னை இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட மாநாடு செட் அமைத்து கிளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

வெளியான ஸ்டில்ஸ்
சமீபத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட போட்டோக்களும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உடன் நடிகர் சிம்பு பேசிக் கொண்டிருக்கும் போது க்ளிக் செய்யப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வைரலாகின.

சிம்புவுடன் புகழ்
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்புவுடன் மாநாடு படப்பிடிப்பு தளத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இருவரும் செம காமெடியான ரகளையில் ஈடுபட்டிருப்பது போட்டோவை பார்த்தாலே தெரிகிறது.

விஜய்சேதுபதி பைக்கில்
சிவகார்த்திகேயனின் டான் படம், பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படம் என குக் வித் கோமாளி பிரபலம் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி உடன் பைக்கில் கிரிக்கெட் பேட் எல்லாம் வைத்துக் கொண்டு புகழ் செல்லும் போட்டோக்கள் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த யோகி பாபு
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக தற்போது கலக்கி வருவது யோகி பாபு தான். அவரும் ஹீரோவாக மாறி ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடித்துள்ள மண்டேலா திரைப்படமும் வெளியாகிறது. இந்நிலையில், அடுத்த யோகி பாபுவாக, நீண்ட தலைமுடியுடன் குக் வித் கோமாளி புகழ் சினிமாவில் கலக்க போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











