அஸ்வின் எப்படி பட்ட ஆள் தெரியுமா? குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ஓபன் டாக்!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 2 தமிழ் ரசிகர்களை கிட்டத்தட்ட 5 மாதங்களாக சிரிக்க வைத்தது.

முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது.

ஷிவாங்கி மற்றும் அஸ்வினின் காம்போவிற்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறினர். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் ஷிவாங்கி.

சூப்பர் சிங்கர் டு கோமாளி

சூப்பர் சிங்கர் டு கோமாளி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக கலந்து கொண்டு கலக்கிய ஷிவாங்கி குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ஏகப்பட்ட குடும்பத்தில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டர். பாடகியாக இருந்த அவருக்குள் இருந்த நகைச்சுவை திறனை குக் வித் கோமாளி ஒட்டுமொத்தமாக வெளிக் கொண்டு வந்தது தான் அவரது வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக மாறியுள்ளது.

அடுப்பு பற்ற வைக்கவே தெரியாது

அடுப்பு பற்ற வைக்கவே தெரியாது

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் தனக்கு அடுப்பு பற்ற வைக்கக் கூட தெரியாமல் இருந்தது. ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டாலும், தற்போது கொஞ்சம் கொஞ்சம் நல்லாவே சமைக்கவும் கற்றுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

அஸ்வின் எப்படி

அஸ்வின் எப்படி

அஸ்வின் செட்டில் ரொம்பவே டெடிகேட்டட் ஆன நபர். அவரை முதல் முதலாக பார்த்த போது, இப்படி ஒரு அழகான பையன் சமைக்க வந்திருக்கானேன்னு தான் நினைச்சேன். ஆனால், எனக்கும் அஸ்வினுக்கும் இடையே ஏற்பட்ட ஜோடி ரசிகர்கள் மத்தியில் இந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனது வளர்ச்சியை பார்த்து அவனும், அவனது வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றார்.

டான் படத்தில்

டான் படத்தில்

டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு கனவாகவே தெரிகிறது. டிவி ஷூட்டிங்கிற்கும் சினிமா படப்பிடிப்புக்கும் டோட்டலாக வித்தியாசம் உள்ளதை முதல் நாளே புரிந்து கொண்டேன். ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமான காமெடி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என நினைக்கிறேன் என்றுள்ளார்.

புகழ் பற்றி

புகழ் பற்றி

ஷிவாங்கி, அஸ்வினை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2வில் மக்களின் மனங்களை கவர்ந்த இன்னொரு போட்டியாளர் என்றால் அது புகழ் தான். ஆன் ஸ்க்ரீனில் மட்டுமல்ல ஆஃப் ஸ்க்ரீனிலும் என்னை தனது சொந்த தங்கையாகவே புகழ் அண்ணன் பார்த்துக் கொள்கிறார் என்றும் ஷிவாங்கி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். குக் வித் கோமாளி செட்டை பிரிய முடியாமல் தவிப்பதாகவும், மீண்டும் அடுத்த சீசன் வந்தாலும், அந்த செட்டிற்குள் நுழைந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X