அட இது புதுசா இருக்கே..கர்ப்பத்தை வித்தியாசமாக அறிவித்த குக் வித் கோமாளி நடிகை!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரித்திகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியாக செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவர், விஜய் டிவி கிரியேட்டிவ் புரடியூசர் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜய் தொலைக்காட்சி பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. வித்தியாசமான இந்த நிகழ்ச்சியில் விதவிதமாக சமைப்பதும், சமையல் செய்பவர்ளை கோமாளிகள் தொல்லை செய்வதும் பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

நடிகை ரித்திகா: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக பார்வையாளர்களை கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி 4 சீசன்களை கடந்துவிட்டது. இதில், இரண்டாவது சீசனில், கலந்துகொண்ட பலர் சினிமாவிலும் சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றனர். அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர் ரித்திகா.

காதல் திருமணம்: நடிகை ரித்திகா சீரியல்களில் நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சீரியலில் பிஸியாக நடித்து வந்த ரித்திகா காதும் காதும் வைத்தது போல, விஜய் டிவி கிரியேட்டிவ் புரடியூசர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எளிய முறையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன் நடைபெற்றது.

மகிழ்ச்சியான செய்தி: தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமின்றி ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா கலக்கல் ராணி, ராஜூ வூட்ல பார்ட்டி' போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருந்த ரித்திகா திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் தலைகாட்டாத வில்லை. தற்போது ரித்திகா, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











