தினுசு தினுசா போஸ் கொடுத்து… கோடையை கூலாக்கும் பவித்ரா லட்சுமி !
சென்னை : குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலும் அனைவரின் மனங்களை வென்ற பவித்ரா லஷ்மி க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பல குறும்படங்களில் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் குக்வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பவித்ரா மற்றும் புகழ் இருவரது காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சி முடிந்தாலும் இவர்கள் மீதான க்ரஷ் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

போட்டியாளராக
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் பவித்ரா. அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார்.

உல்லாசம்
இதையடுத்து, '3 சீசன் ஆப் லவ் ஸ்டோரி' மற்றும் மலையாள படத்தில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகை பவித்ரா லக்ஷ்மி, உல்லாசம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல குறும்படங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் செய்தும் அசத்தி வருகிறார்.

பவித்ரா நாயகியாக
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

கதிருக்கு ஜோடியாக
நடிகைபவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில்அவர், நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதனை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது புது போஸ்
இந்நிலையில், தனது இணையதளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு தகுந்தார் போல புது புது கேப்ஷன்களை பதிவிட்டு வருகிறார். தவறான விஷயங்களை துரத்துவதை நீங்கள் நிறுத்தும் போது சரியான விஷயங்கள் உங்களுக்கு பிடித்ததாக மாறுகின்றன என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











