உள்ளுக்குள்ள ஒரு மாதிரி இருப்போம்.. வெளில வேற மாதிரி ஆயிருவோம்.. பவித்ரா ஓபன் டாக்!
சென்னை : நடிகையும் மாடலுமான பவித்ர லட்சுமி சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி மூலம் பவித்ர லட்சுமிக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புகழுடனான இவரது செயல்பாடுகள் மிகவும் பிரபலம். எலிமினேஷனுக்கு பிறகு அவர் பேசிய அருமையான பேச்சு, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. எலிமினேஷன் எபிசோட் ஒளிபரப்பான பிறகு பவித்ர லட்சுமி, இன்ஸ்டாகிராம் வழியாக தனது ரசிகர்களுடன் பேசினார்.

புகழின் காதலை ஏற்பீர்களா
ரசிகர்களும், தன்னை பின் தொடர்பவர்களும் கேட்ட பல கேள்விகளுக்கு பவித்ர லட்சுமி வெளியிப்படையாக பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், குக் வித் கோமாளியில் கோமாளியாக வரும் புகழின் காதலை ஏற்பீர்களா என கேட்டார்.

உண்மைனு நம்பிட்டீங்களா
இதற்கு பதிலளித்த பவித்ர லட்சுமி, குக் வித் கோமாளி ஒரு ரியாலிட்டி ஷோ. இதில் நடப்பவை அனைத்தும் பொழுதுபோக்கிற்கானது. நிகழ்ச்சிக்கு வெளியே நாங்கள் நல்ல நெருக்கமான நண்பர்கள். நாங்கள் எங்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். ஒருவருக்கொருவர் நெருக்கடியான சமயங்களில் உதவி செய்வோம். நிகழ்ச்சிக்காக நாங்கள் செய்யும் எதுவும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காது என்றார்.

யாருக்கு தான் காதல் வராது
மற்றொரு ரசிகரும், புகழ் மீது உங்களுக்கு காதலா என கேட்டார். அதற்கு பதிலளித்த பவித்ரா, புகழ் மீது யாருக்கு தான் காதல் ஏற்படாது. புகழை எப்போது ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும் பொழுதுபோக்கானவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அவரை போன்றவர்கள் மீது ஒவ்வொருவருக்கும் காதல் ஏற்படும் என்றார்.

வைரலாகும் வீடியோ
புகழுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றி பவித்ர லட்சுமி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் பவித்ரலட்சுமி வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கள் படுவைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











