என் கூட வந்தவரு யாரு தெரியுமா...சஸ்பென்சை உடைத்த பவித்ரலட்சுமி
சென்னை : விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலரின் மனதையும் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் பவித்ர லட்சுமி. மாடலும், நடிகையுமான பவித்ரலட்சுமி, புகழுடன் இணைந்து செய்யும் செய்கைகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.

நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்ட பவித்ர லட்சுமி, சமீபத்தில் வைல்ட்கார்டு போட்டியாளராக மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார். இந்நிலையில் குக் வித் கோமாளியில் இந்த வாரம், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாரமாக நடத்தப்பட்டது.

இதில் பவித்ர லட்சுமி, நடிகர் சுதர்சன் கோவிந்த் என்பவருடன் நிகழ்ச்சிக்கு வந்தார். பலரும் யார் இவர் என ஆச்சரியப்பட்டனர். தற்போது புகழ் மற்றும் சுதர்சனுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ பதிவிட்டு, இருவருக்கும் தான் நல்ல நண்பர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், குக் வித் கோமாளியில் இது குடும்பம் மற்றும் நண்பர்கள் சுற்றாக அமைந்தது. ஆனால் எனது குடும்பம் தற்போது சென்னையில் இல்லை. அதனால் எனது தனது முழு ஆதரவை வழங்கி வரும் சுதர்சன் கோவிந்த் உடன் வந்தேன்.
தேங்ஸ் மா. உண்மையிலேயே சமைக்க தெரிஞ்ச ஓரே ஃபிரெண்ட் நீங்க தான். எனக்கு விருப்பமான அகில உலக சூப்பர் முதல் அனைவரும் உண்மை போன்ற நண்பரையே விரும்புவார்கள் என குறிப்பிட்டுள்ளார். பவித்ர லட்சுமியின் இந்த பதிவை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











