குக்வித் கோமாளி புகழ் பவித்ராவிற்கு அடித்தது யோகம்… விஷயம் என்னன்னு தெரியுமா ?
சென்னை : குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் மனங்களை வென்ற பவித்ரா லஷ்மி தற்போது ஹீரோயினாகி உள்ளார்.
பல குறும்படங்களில் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் குக்வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பவித்ரா மற்றும் புகழ் இருவரது காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. புகழ் பவித்ராவை சுற்றி சுற்றி வருவது ரசிக்கும் படி இருக்கும்.

போட்டியாளராக
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் பவித்ரா. அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார்.
Recommended Video

உல்லாசம் படத்தில்
இதையடுத்து, தமிழ் 3 சீசன் சார் லவ் ஸ்டோரி மற்றும் மலையாள படத்தில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகை பவித்ரா லக்ஷ்மி, உல்லாசம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல குறும்படங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் செய்தும் அசத்தி வருகிறார்.

பவித்ரா லட்சுமி ஹீரோயினாக
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் போடப்பட்டது . இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்க உள்ளார்.

கதாநாயகனாக
ஜித்தன் ரமேஷ் நடித்த ஜெர்ரி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சதீஷ், மதராசப்பட்டினம், எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, ஆம்பள , தேவி ரெமோ, மிஸ்டர் லோக்கல், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்., தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் பிஸியாக நடித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











