அடப்பாவிங்களா.. ஆம்பள விஷால் காருக்கு மேலேயே உட்கார்ந்து பறக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. செம!

சென்னை: குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்‌ஷ்மியை போட்டோ எடிட்டிங் மூலம் பாடாய் படுத்தி உள்ளனர் ரசிகர்கள்.

Recommended Video

குக் வித் கோமாளி சீசன் 2... போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவுனு தெரியுமா?

மாஸ்டர் படத்தில் படு சீரியசாக பேசிய மாளவிகா மோகனன் காட்சியை வைத்து பங்கம் பண்ணியது போலவே பவித்ரா லக்‌ஷ்மியையும் தற்போது "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க" என கேட்கும் அளவுக்கு அட்ராசிட்டி செய்துள்ளனர்.

"அடப்பாவிங்களா" என கேப்ஷன் போட்டு பவித்ரா லக்‌ஷ்மியே அந்த போட்டோக்களை தற்போது ஷேர் செய்துள்ளார்.

குக் வித் கோமாளி பவித்ரா

குக் வித் கோமாளி பவித்ரா

குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா லக்‌ஷ்மி. இவரது அழகை பார்த்து ஏங்காத ரசிகர்களே இல்லை. அஸ்வின், சிவாங்கி, புகழ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவுக்கு இவருக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

சதீஷுக்கு ஜோடி

சதீஷுக்கு ஜோடி

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி முடிந்த கையோடு வெளியே வந்த நம்ம பவித்ரா லக்‌ஷ்மியை படக்குழு புக் செய்து விட்டனர். பட பூஜை போட்டோக்களும் இணையத்தில் வைரலாகின.

கைப்புள்ள

கைப்புள்ள

மஞ்சள் நிற உடை அணிந்து உட்கார்ந்த படி போஸ் கொடுத்த பவித்ரா லக்‌ஷ்மியின் போட்டோவை இஷ்டத்துக்கு எடிட் செய்து போட்டோ மீம்களாக ரசிகர்கள் பறக்க விட்டு வருகின்றனர். கைப்புள்ள வடிவேலுவுக்கு பதில் குக் வித் கோமாளி பவித்ராவை அலேக்காக தூக்கிட்டுப் போவது மரண பங்கம்.

ஆம்பள விஷால் ஜீப்ல

ஆம்பள விஷால் ஜீப்ல

ஏர்ல சும்மா ஆம்பள.. ஆம்பள என்கிற பேக்ரவுண்ட் மியூக்கோட ஜீப்பில் பறக்கும் விஷால் போட்டோவுக்கு பதில் பவித்ரா லக்‌ஷ்மியின் போட்டோவை மேட்ச் பண்ணி சும்மா விளையாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

விஜய் மேல சவாரி

விஜய் மேல சவாரி

குருவி.. குருவி.. பறந்தா என நடிகர் விஜய் பறந்து வரும் போட்டோவை போட்டு அதில் அவரது தோளில் ஹாயாக உட்கார்ந்து சவாரி செய்வது போலவும் எடிட்டிங் அட்ராசிட்டி செய்து இணையத்தை அதிரவைத்துள்ளனர். மேலும் விவேகம் அஜித் குதிக்கும் காட்சியையும் விட்டு வைக்கவில்லை.

அடப்பாவீங்களா

அடப்பாவீங்களா

இப்படி வெரைட்டி வெரைட்டியா வச்சு செய்யும் ரசிகர்களின் ரசனையை பார்த்த பவித்ரா லக்‌ஷ்மி, "அடப்பாவிங்களா" என கேப்ஷன் போட்டு அத்தனை போட்டோக்களையும் செம ஸ்போர்ட்டிவாக தனது ட்விட்டர் பக்கத்திலேயே ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X