தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !

சென்னை : குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி தளபதி65 படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பவித்ரா லட்சுமி நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் கிஷார் ராஜ்குமார் இயக்க உள்ளார்.

நெல்சன் திலீப் குமார்

நெல்சன் திலீப் குமார்

மாஸ்டர் படத்தின்வெற்றிக்குப்பிறகு சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் விஜய் நடிக்கிறார். இப்படத்திற்கு தளபதி 65 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில்அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சென்னையில்படபூஜையைமுடித்த படக்குழுதற்போது ஜார்ஜியாவில்படப்பிடிப்பில்ஈடுபட்டுள்ளது. சமீபத்தில்அங்கு எடுக்கப்பட்டபுகைப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம்வெளியிட்டது. இந்நிலையில்இந்தப் படத்தில்குக்வித்கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்க இருப்பதாகதகவல்கள்வெளியாகின.

உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்

உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவித்ரா லட்சுமியிடம் , செய்தியாளர் ஒருவர், நீங்க தளபதி 65 படத்தில் நடிக்கிறீங்களா எனகேட்டார். இதற்கு அவர், நான் தளபதி 65 படத்தில் நடிக்கிறேனா. இந்த தகவலே நீங்க இப்போ சொல்லிதான் நானே கேள்விப்படுகிறேன். நீங்கள் சொல்லி அது நடந்தால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சதீஷூக்கு ஜோடியாக

சதீஷூக்கு ஜோடியாக

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் மனங்களை வென்ற பவித்ரா லஷ்மி தற்போது, தற்போது ஏஜீஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு பூஜைகள் போடப்பட்டன. இதில் நகைச்சுவை நடிகர் சதீஸ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X