Pugazh: குக் வித் கோமாளி புகழ் மகளோட பெயர் என்ன தெரியுமா?.. செம க்யூட்டா இருக்கே.. இதோ பாருங்க!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கிய புகழ் குக் வித் கோமாளி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில், பெண் குழந்தைக்கு தந்தையானார். இந்நிலையில், அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்திய நிலையில், குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ, சீரியல் என கலந்து கொண்டாலே பலரும் புகழ் அடைந்து வருகின்றனர். பெயரிலேயே புகழை வைத்துக் கொண்டிருக்கும் புகழுக்கு அந்த புகழ் வெளிச்சம் கிடைக்காமலா போய்விடும்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவிலும் கலக்கி வரும் புகழ் தனது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவையும் ஜோராக நடத்தி உள்ளார்.
புகழுக்கு பெண் குழந்தை: "இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்.. என்மகளே ...தாயும் சேயும் நலம்" என கடந்த செப்டம்பர் 27ம் தேதி பதிவிட்டு தான் தந்தையான சந்தோஷத்தை கொண்டாடி இருந்தார் புகழ்.
புகழ் குழந்தையின் பெயர்: இந்நிலையில், தனது மகளுக்கு ரித்தன்யா என பெயர் சூட்டியுள்ள புகழ் அது குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு அறிவித்துள்ளார். "என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே...
கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே..
எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து: குக் வித் கோமாளி புகழுக்கு பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவும் நடைபெற்ற நிலையில், ரசிகர்கள் மகள் ரித்தன்யாவை வாழ்த்தி வருகின்றனர். பெயர் சூப்பராக இருக்கு என விஜய் டிவி பிரபலங்களும் புகழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











