குவியும் வாய்ப்புகள்.. டாப் நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி புகழ்.. முக்கிய கதாப்பாத்திரமாம்!

சென்னை: குக் வித் கோமாளி புகழ் டாப் நடிகரின் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். உச்ச நடிகர்களை காட்டிலும் கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என்றும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் 46வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சன் பிக்சர்ஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடி

சன் பிக்சர்ஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடி


இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார். கலாநிதி மாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்தி நடிக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.

சின்னத்திரை பிரபலம்

சின்னத்திரை பிரபலம்

மேலும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி விரைப்பான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் நகைச்சுவை கேரக்டரில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 46வது படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவரும் கமிட்டாகியுள்ளார்.

விஜய் டிவியின் புகழ்

விஜய் டிவியின் புகழ்

அதவாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ள புகழ் விஜய் சேதுபதியின் 46வது படத்தில் இணைந்துள்ளாராம். தனது எதார்த்தமான நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் புகழ்.

அடுத்தடுத்து வாய்ப்புகள்

அடுத்தடுத்து வாய்ப்புகள்

ஏற்கனவே அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, சிவ கார்த்திகேயனின் டான், அருண் விஜய்யின் 30வது படம் என பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதியின் படத்திலும் கமிட்டாகியுள்ளார் புகழ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X