குக் வித் கோமாளி புகழுக்கு அடித்த ஜாக்பாட்.. அதிரடி இயக்குநரின் படத்தில் ஆன்போர்டு!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகழ் இயக்குநர் ஹரி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வனிதா விஜயக்குமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பெரும் ஹிட்டானது. இதில் வனிதா டைட்டில் வின்னரானார்.

குக் வித் கோமாளி சீசன் 2

குக் வித் கோமாளி சீசன் 2


நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

கோமாளிகள்..

கோமாளிகள்..

இதில் நடிகை ஷகீலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் குக்குகளாக பங்கேற்றுள்ளனர். இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ஷகீலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் குக்குகளாக பங்கேற்றுள்ளனர். இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பலரும் ரசிகர்கள்

பலரும் ரசிகர்கள்

வழக்கமான சமையல் நிகழ்ச்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சமையல் நிகழ்ச்சியாக முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்ததாக உள்ளது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன் பாராட்டு

சிவகார்த்திகேயன் பாராட்டு

இதில் விதவிதமாக சமைத்து அசத்தும் ஷகீலா, சக போட்டியாளர்களுடனும் ஒரு அன்பான உறவை கொண்டுள்ளார். சக போட்டியாளர்கள் அனைவரும் ஷகீலாவை மம்மி மம்மி என்று அழைத்து வருவது அவரையே நெகிழ வைத்துள்ளது.

புகழுக்கு ஜாக்பாட்

புகழுக்கு ஜாக்பாட்

அவர்கள் அனைவருடனும் பணிபுரிய விரும்புவதாகவும் அனைவருக்கும் தனது படத்தில் நிச்சயம் வாய்ப்பு ஒவ்வொருவருக்காய் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ள புகழுக்கு முன்னணி இயக்குநரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹரி இயக்கும் படம்

ஹரி இயக்கும் படம்

புகழ் ஏற்கனவே ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புகழ் ஹரியின் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரம்ஸ்டிக்ஸ் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பு அளித்ததற்கு படக்குழுவுக்கு புகழ் நன்றி தெரிவித்து டிவிட்டியுள்ளார்.

More from Filmibeat

Read more about: pugazh புகழ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X