குக் வித் கோமாளி.. இரண்டாவது பைனலிஸ்டாக உள்ளே சென்றுவிட்டார் ரம்யா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு எவ்வளவு ரசிகர்களோ அதே அளவிற்கு ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஷோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் உண்டு.

விஜய் டிவியில் வரும் ஒரு ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. ரக்ஷன் மற்றும் நிஷா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் செப் தானு மற்றும் செப் வெங்கடேஷ் பட் நடுவர்களாக உள்ளனர்.
திரைபிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ரேகா முதல் ரம்யா பாண்டியன் வரை அனைவரும் கலந்து கொண்டு வாரம் பல உணவுகளை சமைப்பார்கள் அதில் நன்றாக சமைத்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்வர் தோல்வி அடைபவர்கள் வெளியேறுவர்.
தற்போது நேற்று நடைபெற்ற போட்டியில் ரம்யா பாண்டியன் வெற்றி பெற்று இரண்டாவது பைனல் போட்டியாளராக முன்னேறி உள்ளார் மற்றும் மூன்றாவது போட்டியாளராக வனிதா வெற்றி பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் வெளியேறி விட்டார். முதல் பைனலிஸ்டாக உமா ரியாஸ்கான் ஏற்கனவே முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியேறிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு சுற்றில் பங்கு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வார வாரம் ஆரவாரம் உடன் நடந்து கொன்டு இருக்கும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுள்ளது. ரசிகர்கள் இந்த ஷோவை தவறாமல் பார்த்து வருகின்றனர்.
இனி வரும் வாரங்களில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்ல வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இந்த ஷோ முடியும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











