குக் வித் கோமாளி.. அசத்தும் ரம்யா பாண்டியன்

சென்னை : பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அசத்தி வருகிறார் ரம்யா பாண்டியன்.

போட்சூட்களின் மூலம் பிரபலமாகி தற்போது முக்கிய நட்சத்திரமாக மாறியிருக்கிறார் ரம்யா பாண்டியன். மானே தேனே பொன்மானே, கூந்தலும் மீசையும், டம்மி டப்பாசு மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் ரம்யா பாண்டியன். ஆனால் ரம்யா பாண்டியனை ரசிகர்கள் அடையாளம் கண்டது அவரின் கவர்ச்சி நிறைந்த போட்டோசூட்களின் மூலம் தான் .

Cook with comali ramya pandiyan

இதற்கு பிறகு பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் கடை திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தினாராக கலந்து கொண்டு பிஸியாகி போனார். இதற்கு பிறகு விஜய் டீவியின் குக் வித் கோமாளி எனும் வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியில் குக் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனுடன் குக்காக அஃதாவது சமையல் செய்பவர்களாக வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, உமா ரியாஷ் , ப்ரியங்கா சங்கர் (ரோபோ சங்கர் மனைவி ), தாடி பாலாஜி , ஞானசம்மந்தம் மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை தொந்தரவு செய்யும் கோமாளிகளாக தங்கதுரை, சிவாங்கி, சாய் சக்தி , பப்பு, பாலா, மணிமேகலை மற்றும் பிஜிலி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர் .

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக அரந்தாங்கி நிஷா மற்றும் ரக்சன் உள்ளார். நடுவர்களாக செப் தாமோ மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளனர் . இதுவரை இந்த நிகழ்ச்சியின் 14 எபிஸோடுகள் ஒளிப்பரப்பாகி உள்ளது. மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறி உள்ள இந்த நிகழ்ச்சியின் முக்கியமான நட்சத்திரம் என்றால் அது ரம்யா பாண்டியன் தான் .

ஒவ்வொரு வாரமும் குழுக்கல் முறையிலோ அல்லது விளையாட்டு ரீதியில் குக்கிற்கான கோமாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போது ரம்யா பாண்டியன் யாருக்காச்சும் வந்து விட்டால் இந்த கோமாளிகள் போடும் ஆட்டம் என்னில் அடங்காதது தங்களுக்கு ஏதோ வாழ்வில் நடக்காத ஒன்று நடந்தேரியதை போல பயங்கரமான ஆட்டம் போட்டு தள்ளிவிடுவார்கள் .

ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்னும் மக்களிடம் சென்று சேர்ந்து விட்டார் என்றே கூறலாம் ஏனெனில் ,முகம் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு எளிதில் கிடைத்து விடும். ரம்யா பாண்டியனையும் நாம் விரைவில் பல படங்களில் பார்க்கலாம் என நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X