குக் வித் கோமாளி சீசன் 3… அவரை மாத்துங்க … ஆரம்பமே சர்ச்சையா?

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 3 கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. ஆரம்பமே அட்டகாசமாக இருந்தாலும், நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் புது கோமாளியால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

3ம் சீசனில் ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல, பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சக்தி, மூக்குத்தி முருகன், குரேஷி, பரத் என மொத்தம் 10 பேர் கோமாளிகளாக இந்த சீசனில் உள்ளனர்.

ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோ

விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் இதுவரை ஒளிப்பரப்பாகி இருக்கின்றன. ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற ஒரு சில நிகழ்ச்சிகள் இப்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. அந்த லிஸ்டில் இணைந்த மற்றொரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

செம லூட்டி

செம லூட்டி

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை அதாங்க சமையல் நிகழ்ச்சியில் கோமாளிக்கு என்ன வேலைனு கேட்டா, இந்த நிகழ்ச்சியின் சுவாரசியமே அவங்க தான். குக்குகளை சமையல் செய்யவிடாமல் தடுப்பது, சமையலில் சொதப்புவது என இவர்கள் அடிக்கும் லூட்டியை சொல்லிமாலாது அந்த அளவுக்கு இருக்கும்.

கவலை மறந்து சிரிக்க

கவலை மறந்து சிரிக்க

முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மிகப்பெரிய வெற்றி கண்டது. நிகழ்ச்சி முடிந்த உடன் ஏகப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் சீசன் 3ஐ சீக்கிரமாக தொடங்கினால் நல்லா இருக்கும் என்று அன்பு கோரிக்கைகளை விட தொடங்கினர். அந்த அளவுக்கு ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

கோமாளிகள்

கோமாளிகள்

குக் விக் வித் கோமாளி சீசன் 3 கடந்த வாரம் தொடங்கியது. அதில் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் கோமாளியாக வந்திருக்கும் பரத்தை பல பேருக்கு பிடிக்கவில்லை. காமெடி செய்கிறேன் என்ற பெயரில் அவர் செய்யும் சேஷ்டைகளை பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

Recommended Video

CWC புது Comali Sheethal Clarin Unknown Biography | Cook With Comali Sheethal
காமெடியனுக்கு பஞ்சமா

காமெடியனுக்கு பஞ்சமா

குறிப்பாக சமையல் செய்யும் போது கத்திரிக்காயா இது என்பது போல நடந்து கொண்டது, சக போட்டியாளர்களை மாமா என்று அழைத்தது பலருக்கு பிடிக்கவில்லை. தயவு செய்து பரத்தை நீக்குங்கள் என்றும், விஜய் டிவியில் காமெடியனுக்கு பஞ்சம் வந்துவிட்டதா என்றும் கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X